/indian-express-tamil/media/media_files/2024/10/25/zsvUU10sUTEKH2QdCNlU.jpg)
கோவையில் டாக்ஸி மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளனாதில், இரு வாகனத்தின் டிரைவர்களும், சாலையில் நிறுத்தி வாக்குவாதத்தில் ஈபட்டதால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், போக்குவரத்து காவலர் விசாரணை இன்று இருவரையும் புகைப்படம் எடுத்துக்கொண்டு அபராதம் விதித்தார்.
கோவை சாய்பாபா காலனி பிரதான சாலையான என்.எஸ்.ஆர் சாலையில் சென்று கொண்டு இருந்த டாக்ஸி மீது இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மோதிவிட்டார். இது குறித்து கேள்வி எழுப்பிய டாக்ஸி ஓட்டுனரிடம் சாலையில் நின்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரு சக்கரவாகனத்தில் வந்தவர், தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறப்படுகின்றது.
இது குறித்த தகவல் அறிந்து அங்கு வந்த போக்குவரத்து காவலர் ஒருவர் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தாமல் அங்கு நிறுத்தி இருந்த கால் டாக்ஸிக்கு அபராதம் விதிக்க புகைப்படம் மற்றும் வீடியோக்களை எடுத்து உள்ளார். இது பற்றி பாதிக்கப்பட்ட ஓட்டுநர் அவரிடம் கேள்வி எழுப்பியபோதும், அதனை அவர் கண்டுகொள்ளாமல் அபராதம் விதிப்பது மட்டும் நோக்கமாகக் கொண்டு புகைப்படங்களை எடுத்து சென்றார்.
இந்த சம்பவத்தை அங்கு இருந்த நபர் ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவு செய்தார். டாக்ஸி மீது மோதி நிற்காமல் சென்ற இரு சக்கர வாகனத்தை பற்றி எதுவும் விசாரிக்காமல்,சம்பவ இடத்திற்கு வந்த காவலர் ஒருவர் தனது செல்போனில் புகைப்படங்களை எடுத்து அபராதம் மட்டும் விதித்துச் சென்றது அனைத்து டாக்ஸி ஓட்டுநர்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.