/indian-express-tamil/media/media_files/2025/07/23/cm-stalin-2025-07-23-18-43-49.jpg)
மேட்டூர் அணையின் நீர்மட்டம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 13,820 கன அடியாக குறைந்தது. அணையின் நீர் மட்டம் 119.83 அடியாகவும், நீர் இருப்பு 93.200 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. நீர் வெளியேற்றம் விநாடிக்கு 14,625 கன அடியில் இருந்து 13,820 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.
-
Aug 04, 2025 14:11 IST
டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஸ்டாலின் பாராட்டு
வெளிநாட்டு முதலீடுகளை தமிழ்நாட்டில் கொண்டு வந்து அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா குவிக்கிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். தூத்துக்குடியை தொழிற்வளர்ச்சி மிக்க மாவட்டமாக வளர்த்து எடுக்கிறார். சொன்னதை செய்வோம் என்பதுதான் நமது அரசின் குறிக்கோள் என தெரிவித்தார்.
-
Aug 04, 2025 13:57 IST
நெல்லை ஆவணப் படுகொலை - கவின் குடும்பத்துக்கு ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல்
நெல்லையில் காதல் விவகாரத்தில் ஆணவக்கொலை செய்யப்பட்ட கவின் குடும்பத்தினரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் தெரிவித்துள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
-
Aug 04, 2025 13:20 IST
தூத்துக்குடியில் விண்வெளிப் பூங்கா: முதல்வர்
தூத்துக்குடியில் பசுமை ஹைட்ரஜன், சோலார் செல் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்தி உள்ளோம். 250 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி பூங்கா அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Aug 04, 2025 13:18 IST
தொழில் வளர்ச்சியே முதன்மை என செயல்படுகிறோம்: முதல்வர்
தமிழ்நாட்டின் தொழில்வளர்ச்சியை முதன்மையாக கொண்டு கட்டமைப்பை அரசு உருவாக்கியுள்ளது. முதலீட்டாளர்களுக்கான மாநாடு, சந்திப்புகளை தொடர்ச்சியாக நடத்திக் கொண்டு வருகிறோம். சென்னை, கோவை, தூத்துக்குடி, ஜப்பான் என பல இடங்களில் முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தியுள்ளோம். சொன்னதை செய்வோம் என்பதுதான் அரசின் குறிக்கோள். தென் மாவட்ட தொழிற்பூங்காவில் தொழிற்சாலைகளுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்படுகின்றன என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
-
Aug 04, 2025 12:42 IST
ரூ.32,000 கோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து
தூத்துக்குடி முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.32,000 கோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் 41 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. ரூ.32,554 கோடி தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டு 50,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். தூத்துக்குடியில் ரூ.4,995 கோடி முதலீடு செய்கிறது Kaynes Circuit india நிறுவனம். தேனி மாவட்டத்தில் ரூ.1,500 கோடி முதலீட்டில் சூரிய சக்தி மின் தகடு உற்பத்தி செய்யும் ஆலை அமைகிறது. டெல்லியைச் சேர்ந்த மோபியஸ் எனர்ஜி நிறுவனம் ரூ.1,500 கோடியில் ஆலையை அமைக்கிறது.
-
Aug 04, 2025 12:41 IST
கவின் ஆணவக் கொலை வழக்கு – தவறான வீடியோவை பகிர்ந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாநகர காவல்துறை எச்சரிக்கை
கவின் ஆணவக் கொலை வழக்கு பற்றி சமூக வலைதளங்களில் தவறான வீடியோவை பகிர்ந்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நெல்லை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கவின் கொல்லப்பட்டதாக கூறி தொடர்பில்லாத வீடியோவை சிலர் பகிர்ந்து வரும் நிலையில். கவின் கொலை வழக்கு தொடர்பாக சமூக வலைதளங்களில் பரப்பப்படும் காணொளி தவறானது என்று காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
Aug 04, 2025 12:32 IST
ஆக.17 முதல் நயினார் நாகேந்திரன் தொகுதி வாரியாக சுற்றுப்பயணம்
இம்மாதம் 17ம் தேதி முதல் தொகுதி வாரியாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சுற்றுப்பயணம். ஆக. 17ம் தேதி நெல்லையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை நயினார் நாகேந்திரன் தொடங்க உள்ளார். ஈபிஎஸ், அன்புமணி, பிரேமலதாவை தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் நயினார் நாகேந்திரன்
-
Aug 04, 2025 12:24 IST
கோவை- பைக் டாக்ஸியை தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
பைக் டாக்ஸியை தடை செய்யக் கோரி ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம். சொந்த வாகனத்தை வாடகை வாகனமாக இயக்க தடை விதிக்கக் கோரி டாக்ஸி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
-
Aug 04, 2025 12:07 IST
கவின் கொலை வழக்கின் விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என முறையீடு
கவின் கொலை வழக்கின் விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என முறையீடு செய்யப்பட்டது. ஐபிஎஸ் தரத்துக்கு குறையாத அலுவலரை கொண்டு விசாரிக்க வேண்டும் என கோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மனுவாக தாக்கல் செய்தால் வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர். நெல்லையில் இளைஞர் கவின் ஆணவக் கொலை வழக்கை தாமாக விசாரிக்கக் கோரி ஐகோர்ட்டில் முறையீடு செய்யப்பட்டது.
-
Aug 04, 2025 11:41 IST
ஆடி பெருக்கையொட்டி, தடபுடலாக நடந்த கறிவிருந்து
ஆடி பெருக்கை ஒட்டி, திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே கருப்பண்ணசாமி கோயிலில் 300க்கும் மேற்பட்ட கிடா ஆடுகளைக் கொண்டு தடபுடலாக கறி விருந்து பரிமாறப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று கோயிலில் வழிபாடு செய்து உணவருந்தினர்.
-
Aug 04, 2025 11:00 IST
‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் 44,418 பேர் பயன்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து, கடந்த சனிக்கிழமை (ஆக.2) நடந்த ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் மூலமாக தமிழ்நாடு முழுவதும் 44,418 பேர் பயன் பெற்றனர். அதிகபட்சமாக சென்னையில் 2,935, விழுப்புரத்தில் 2,013, திருவள்ளூரில் 1,416 பேர் முகாம்களில் சிகிச்சை பெற்றுள்ளனர்.
-
Aug 04, 2025 11:00 IST
திருத்தணி அருகே லாரி மீது கார் மோதியதில் 2 பேர் பலி
திருத்தணி அருகே நிறுத்தியிருந்த லாரி மீது கார் மோதியதில் இருவர் உயிரிழந்தனர். காரில் இருந்த மூவரில் ஷேக் ஷாஜகான், உபேனா ஆகியோர் உயிழந்தனர்; அபி உமர் சாய் என்பவருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
-
Aug 04, 2025 10:16 IST
பிக்னிக் சென்ற வங்கி ஊழியர் உள்பட 2 பேர் சடலமாக மீட்பு
தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் குடும்பத்துடன் பிக்னிக் சென்ற வங்கி ஊழியர் உள்பட இருவர், நேற்று மாலை கொட்டக்குடி ஆற்றில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். ஆற்றைக் கடக்க முயன்றபோது திடீரென தண்ணீர் அதிகரித்து ஜஹாங்கீர் மற்றும் மஜித் இருவரும் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். அங்குள்ள சுனையில் மீட்கப்பட்ட இருவரின் சடலங்களும் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
-
Aug 04, 2025 10:13 IST
இன்று கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட்
கோவை, நீலகிரி மாவட்டங்களில் திங்கள்கிழமை (ஆக.4) மிக பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதால் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புகா் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை லேசான மழை பெய்த நிலையில், திங்கள்கிழமையும் (ஆக.4) இடி, மின்னலுடன் கூடிய, மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
-
Aug 04, 2025 10:10 IST
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.83 அடியாக குறைந்தது
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119.83 அடியாக குறைந்தது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வந்தது. இன்று காலை 8 மணிக்கு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 14,625 கன அடியிலிருந்து வினாடிக்கு 13,820 கனஅடியாக குறைந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 16,000 கனஅடி நீரும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கனஅடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
-
Aug 04, 2025 09:56 IST
கொடிவேரி அணையில் 9வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை
ஈரோடு: கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் 9வது நாளாக இன்றும் சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக பாதுகாப்பு கருதி தடை விதிக்கப்பட்டுள்ளது
-
Aug 04, 2025 09:56 IST
யாத்திரைப் பணியாளர்கள் பக்தர்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது தடை
ராம் சேது யாத்திரை என்ற பெயரில் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் ராமாயணக் கதைகளைக் கூறி அதற்கு ரூ.20 கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது என்று கூறி ராம சேது யாத்திரைப் பணியாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் தனுஷ்கோடி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து ராமேஸ்வரம் கோதண்டராமர் கோயிலில் ராம் சேது யாத்திரைப் பணியாளர்கள் பக்தர்களிடம் பணம் வசூலிக்கக் கூடாது, பணி செய்யக்கூடாது என கோயில் இணை ஆணையர் செல்லதுரை உத்தரவிட்டுள்ளார்.
-
Aug 04, 2025 09:02 IST
சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட்ட மு.க.ஸ்டாலின்
தூத்துக்குடியில் வின்பாஸ்ட் கார் தொழிற்சாலையை திறந்து வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து புறப்பட்டார். தூத்துக்குடியில் நடைபெறும் தொழில் முதலீட்டு மாநாட்டிலும் கலந்துகொள்கிறார்
-
Aug 04, 2025 09:01 IST
கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் முழுவதுமாக நிறுத்தம்
தஞ்சாவூர் மாவட்டம் அணைக்கரையில் உள்ள கீழணைக்கு நீர்வரத்து குறைந்ததால் கொள்ளிடம் ஆற்றில் கடந்த 5 நாட்களாக வெளியேற்றப்பட்டு வந்த உபரி நீர் முழுவதுமாக நிறுத்தம்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.