Coimbatore, Madurai, Trichy Updates: திருச்சி அருகே திருவிழாவில் வெடி விபத்து; சிறுமி பலி

Tamil Nadu News Update: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

Tamil Nadu News Update: கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் இந்த இணைப்பில் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
girl death

ராமநாதபுரம், உப்பூர் அருகே கோயிலுக்கு பாதயாத்திரை சென்றவர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்துக்குள்ளானதில், 2 பெண் பகதர்கள் சம்பவ இடத்திலேயே மரணமடைந்த நிலையில், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • Jul 24, 2025 20:10 IST

    திருச்சி அருகே திருவிழாவில் வெடி விபத்து; சிறுமி பலி

    திருச்சி வாத்தலையில் திருவிழாவில் வானத்தை நோக்கி வீசப்பட்ட வெடி கீழே விழுந்து வெடித்ததில் இரண்டரை வயது குழந்தை உயிரிழந்தது. வாத்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Jul 24, 2025 18:49 IST

    திருடுபோன ரூ.18 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் ஒப்படைப்பு

    நெல்லை மாவட்டத்தில் திருடுபோன ரூ.18 லட்சம் மதிப்பிலான 100 செல்போன்கள், அதன் உரியவர்களிடம் இன்று ஒப்படைக்கப்பட்டது.



  • Advertisment
  • Jul 24, 2025 18:27 IST

    கடல் அரிப்பு - குமரி ஆட்சியர் நேரில் ஆய்வு

    கன்னியாகுமரி மாவட்டம் புத்தன் துறை பகுதியில் கடல் அரிப்பு ஏற்படுவது அங்கு குடியிருப்போரை அச்சப்படுத்தியிருக்கும் நிலையில் மாவட்ட ஆட்சியர் அங்கு ஆய்வு செய்தார்.



  • Jul 24, 2025 18:24 IST

    ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 10 பள்ளி குழந்தைகள் காயம்

    திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 10 பள்ளி குழந்தைகள் காயம் அடைந்துள்ளனர். குழந்தைகளை ஏற்றிக் கொண்டு வீடு திரும்பியபோது சாலையோரம் ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்த 10 குழந்தைகளும் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



  • Advertisment
    Advertisements
  • Jul 24, 2025 17:33 IST

    விஜய் பட பதாகையை காலால் மிதித்தும் எதிர்ப்பு

     செஞ்சியில் தவெக பொதுச்செயலாளர் என்.ஆனந்த் கலந்துகொண்ட கூட்டத்தில், கட்சிப் பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து நபர் ஒருவர் நீதி கேட்டு சத்தமிட்டார். விஜய் பட பதாகையை காலால் மிதித்தும் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். 



  • Jul 24, 2025 17:11 IST

    சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு

     சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தந்தை - மகன் கொலை வழக்கில் அப்ரூவராக மாற அனுமதி கோரி முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார்.



  • Jul 24, 2025 17:08 IST

    ஏடிஜிபி ஜெயராமிடம் 4 மணி நேரமாக சிபிசிஐடி போலீசார் விசாரணை

    சிறுவன் கடத்தல் வழக்கில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏடிஜிபி ஜெயராமிடம் 4 மணி நேரமாக சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜரானார்.



  • Jul 24, 2025 16:42 IST

    நம்பெருமாள்சாமி மறைவு; ஸ்டாலின் இரங்கல்

    மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை குழுமத்தின் தலைவர் நம்பெருமாள்சாமி மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.



  • Jul 24, 2025 16:33 IST

    தூத்துக்குடிக்கு ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

    தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய பெருவிழாவை ஒட்டி தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுகட்டும் வகையில் வரும் 9ம் தேதி வேலை நாளகும்.



  • Jul 24, 2025 15:21 IST

    அஜித்குமார் மரணம்: நிகிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

    திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் மதுரை சிபிஐ அலுவலகத்தில் நிகிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.



  • Jul 24, 2025 14:57 IST

    சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கு

    சாத்தான்குளம் தந்தை - மகன் கொலை வழக்கில் கைதான காவல் ஆய்வாளரின் அப்ரூவர்கோரிக்கைக்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.



  • Jul 24, 2025 12:59 IST

    குழந்தைகளை கொன்ற வழக்கில் தாயை குற்றவாளி என அறிவித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் தீர்ப்பு

    குழந்தைகளை கொன்ற வழக்கில் தாயை குற்றவாளி என அறிவித்து காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சென்னை, குன்றத்தூரில் அபிராமி என்ற பெண் திருமணத்தை மீறிய உறவுக்காக தனது 2 குழந்தைகளை கொன்ற வழக்கில், காஞ்சிபுரம் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பளித்துள்ளது.



  • Jul 24, 2025 12:18 IST

    உதகையில் இன்று பைன் காடுகள், 8th மைல் Tree Park சுற்றுலாத்தலங்கள் மூடல்

    உதகையில் இன்று (ஜூலை 24) பைன் காடுகள், 8th மைல் Tree Park சுற்றுலாத்தலங்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி இன்று ஒருநாள் மூடப்படுவதாக வனத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.



  • Jul 24, 2025 12:03 IST

    மின்னொளியில் ஜொலிக்கிறது கங்கைகொண்ட சோழபுரம்!

    அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரத்தில் ஆடி திருவாதிரை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ள நிலையில், மின்னொளியில் ஜொலிக்கிறது கங்கைகொண்ட சோழபுரம்!



  • Jul 24, 2025 11:27 IST

    அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 10 செ.மீ. மழை பதிவு!!

    தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாறில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சின்கோனா, சோலையாறு, வால்பாறையில் தலா 7 செ.மீ. மழை பெய்துள்ளது. தமிழ்நாட்டில் 4 இடங்களில் கனமழை பெய்துள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.



  • Jul 24, 2025 10:54 IST

    முட்டை விலை 20 காசுகள் குறைந்து ரூ.4.80ஆக நிர்ணயம்..!!

    முட்டை ஒன்றின் பண்ணைக் கொள்முதல் விலை 20 காசுகள் குறைந்து ரூ.4.80ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முட்டை விலை நேற்று 15 காசுகள் குறைந்திருந்த நிலையில் இன்று மீண்டும் 20 காசுகள் குறைந்துள்ளது.



  • Jul 24, 2025 10:53 IST

    அதிமுக – பாஜக கூட்டணியை உடைக்க முயற்சி: எடப்பாடி பழனிசாமி

    அதிமுக – பாஜக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்தி உடைக்க பார்க்கிறார்கள் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். அதிமுக – பாஜக கூட்டணியை யாராலும் உடைக்க முடியாது; வலிமையாக உள்ளது என ஒரத்தநாட்டில் பிரச்சார பயணத்தின்போது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.



  • Jul 24, 2025 10:34 IST

    சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி..!!

    மழை குறைந்ததால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை அனுமதி அளித்துள்ளது. மழை குறைந்ததை அடுத்து 5 நாட்களுக்கு பிறகு சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.



  • Jul 24, 2025 10:30 IST

    உதகையில் தொடர் மழை - சுற்றுலா தலங்கள் மூடல்

    உதகையில் தொடர் மழை காரணமாக  பைன் பாரஸ்ட், 8th மைல், மரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் இன்று மூடப்படுவதாக வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • Jul 24, 2025 10:29 IST

    சிறுமி பாலியல் வன்கொடுமை: 400க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை 

    திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி அருகே கடந்த 12ஆம் தேதி வட மாநில இளைஞரால் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொடூரம சம்பவம் தொடர்பாக,இதுவரை தனிப்படை போலீசார் 400க்கும் 
    மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும், குற்றவாளி குறித்து தகவல் தெரிவிக்க போலீசார் அறிவித்த செல்போன் எண்ணிற்கு 100க்கும் மேற்பட்ட அழைப்புகள் வந்துள்ளன என்றும் தகவல் வெளியாகியுள்ளது,



  • Jul 24, 2025 10:02 IST

    இளம்பெண் கொலை வழக்கு - மேலும் 4 பேர் கைது

    ராமநாதபுரம், சாயல்குடி அருகே இளம்பெண் கொலை வழக்கில் ஏற்கனவே கணவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எல்லை பாதுகாப்புப் படை வீரராக உள்ள விஜயகோபால் ஜெர்மின் என்பவரை காதல் திருமணம் செய்து 2 குழந்தைகள் உள்ளனர். ஆனால் விஜய கோபாலுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் 5 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்த ஜெர்மினை கடந்த 17-ந் தேதி மர்மநபர்கள் வீடு புகுந்து அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பினர். இது தொடர்பான விசாரணையில், ஜெர்மினை கணவர் விஜயகோபாலே ஆள் வைத்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.



Tamilnadu

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: