/indian-express-tamil/media/media_files/2025/03/06/glBN9UaPji3KGsKe2E5T.jpg)
தூத்துக்குடி மாவட்டம் மேலநம்பிபுரம் கிராமத்தில் தாய், மகள் கொல்லப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த முனீஸ்வரன் என்பவரை காவல்துறையினர் சுட்டுப்பிடித்துள்ளன. காவல்துறையை தாக்கி விட்டு தப்பி ஓட முயன்றபோது வலது காலில் சுட்டுள்ளனர். இதனால், காயம் அடைந்த முனீஸ்வரன், காவல் உதவி ஆய்வாளர் முத்துராஜ் ஆகியோர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
-
Mar 06, 2025 20:25 IST
இலவச வீட்டு மனை பட்டா கேட்டு காலையில் மனு அளித்த பெண்; வீட்டுக்கே சென்று பட்டா வழங்கிய உதயநிதி
திருவாரூர் அருகே பழவனக்குடி கிராமத்தில் இன்று காலை, இலவச மனை பட்டா வழங்கக் கோரி சுகன்யா என்ற பெண் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் மனு அளித்திருந்தார். உடனடியாக பட்டா வழங்க அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் உத்தரவிட்டிருந்த நிலையில், இன்று மாலை அவரே நேரடியாகச் சென்று, அப்பெண்ணிற்கு பட்டா வழங்கினார்.
-
Mar 06, 2025 18:01 IST
மின்சாரம் தாக்கி கேங்மேன் பலி
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அர்த்தனேரியில் பராமரிப்பு பணியின்போது மின்சாரம் தாக்கி கேங்மேன் உயிரிழந்தார். மின்கம்பத்தில் ஏறி பழுதை சரி செய்தபோது மின்சாரம் பாய்ந்ததில் கேங்மேன் ராஜாராம் உயிரிழந்தார்.
-
Mar 06, 2025 17:18 IST
கச்சத்தீவு திருவிழா - பைபர் படகில் செல்ல ஆட்சியர் பரிசீலிக்க உத்தரவு
கச்சத்தீவு திருவிழாவுக்கு மோட்டார் பொருத்திய பைபர் படகில் செல்ல அனுமதி கோரிய மனுவை ஆட்சியர் பரிசீலிக்க ஆணையிடப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த பிரின்சோ ரேமன்ட் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல். மனுதாரரின் மனுவை ராமநாதபுரம் ஆட்சியர் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
-
Mar 06, 2025 16:57 IST
வங்கியில் கொள்ளை முயற்சி: அலாரம் அடித்ததால் தப்பிய 100 கிலோ தங்கம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த திருநாவலூரில் உள்ள இந்தியன் வங்கியில் கொள்ளை முயற்சி நடந்துள்ளது. வங்கின் அலாரம் ஒலித்ததால் திருடர்கள் மிரண்டு ஓடிய நிலையில், 100 கிலோ தங்கம் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
Mar 06, 2025 15:58 IST
திண்டிவனத்தில் இருந்து கடத்தப்பட்ட கூழாங்கற்கள் பறிமுதல்
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து சென்னைக்கு சுமார் 2 லடசம் மதிப்பிலான கூழாங்கற்களை 2 லாரிகளில் கடத்தி சென்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 லாரிகளையும் பறிமுதல் செய்த காவல்துறையினர் கூழாங்கற்கள் உரிமையாளரை தேடி வருகின்றனர்.
-
Mar 06, 2025 14:42 IST
பரோட்டா சாப்பிட்ட தாய், மகன் உயிரிழப்பு
திருப்பத்தூர் அருகே ஹோட்டலில் பரோட்டா வாங்கி சாப்பிட்ட தாய் மற்றும் மகன் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.
-
Mar 06, 2025 14:02 IST
ஓய்வு பெற்ற ஆசிரியைக்கு 15 இடங்களில் கத்திக்குத்து
டெலிக்காம் நகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியை நிர்மலா என்பவருக்கு 15 இடங்களில் கத்திக்குத்து. தடுக்க வந்த அவரது கணவருக்கும் கத்திக்குத்து. முன்விரோதம் காரணமாக எதிர் வீட்டைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர் பிரேம் வெறிச்செயல். மயிலாடுதுறை நகர போலீசார் பிரேமை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
-
Mar 06, 2025 13:19 IST
சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து டிஜிபி சங்கர்ஜிவால் ஆலோசனை
மதுரை, விருதுநகர் மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுவது குறித்து டிஜிபி ஆலோசனை தெரிவித்துள்ளார். தமிழக காவல்துறை டிஜிபி சங்கர்ஜிவால் மதுரை, விருதுநகர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
-
Mar 06, 2025 12:27 IST
கொடி மரங்களை அகற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
தேசிய நெடுஞ்சாலைகள் மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை ஓரங்களில் கொடி மரங்களை அகற்ற தனி நீதிபதி இளந்திரியன் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் அலுவலகங்களில் கொடி மரங்கள், கட்சி கொடிகளை வைத்துக் கொள்ளுங்கள் சாலைகளை பயன்படுத்த வேண்டாம் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
Mar 06, 2025 12:05 IST
மூதாட்டிக்கு 15 இடங்களில் கத்திக் குத்து
மயிலாடுதுறையை அடுத்த மதுரா நகர் பகுதியில் எதிர் வீட்டில் வசிக்கும் மூதாட்டி நிர்மலாவை 15 முறை கத்தியால் குத்திய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இரு குடும்பத்திற்கும் இடையே முன்பகை இருந்ததால் கத்திக்குத்து என தகவல்; தடுக்க வந்த மூதாட்டியின் கணவருக்கும் 3 இடங்கிளில் கத்திகுத்து; படுகாயமடைந்த மூதாட்டி சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு
-
Mar 06, 2025 11:47 IST
ஜெயலலிதாவின் எஸ்டேட் மேலாளரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணைக்காக சிபிசிஐடி போலீசார் முன்பு எஸ்டேட் மேலாளர் நடராஜன் ஆஜர். கோவை காந்திபுரத்தில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் தற்போது விசாரணை. இந்த வழக்கில் இதுவரை 250 பேரிடம் CBCID போலீசார் வாக்குமூலம் பெற்றுள்ளனர்.
-
Mar 06, 2025 11:16 IST
குழந்தை திருமணம் - தாய் உட்பட 3 பேர் கைது
கிருஷ்ணகிரி: அஞ்செட்டி அருகே 14 வயது சிறுமிக்கு திருமணம் செய்துவைத்த புகாரில் மூவர் கைது. சிறுமியின் தாய், சிறுமிக்கு தாலி கட்டி அழைத்துச் சென்றவர் அவரது சகோதரர் ஆகியோரை கைது செய்து காவல்துறை விசாரணை; சிறுமி கதறி அழுத வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திருந்தது.
-
Mar 06, 2025 10:48 IST
பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை
யானைகள் நடமாட்டம் இருப்பதால் கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு இன்று (மார்ச் 6) முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை யாரும் செல்லக் கூடாது என வனத்துறையினர் கூறியுள்ளனர்.
-
Mar 06, 2025 09:47 IST
அரசு ஒப்பந்ததாரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
கரூரில் அரசு ஒப்பந்ததாரர் சங்கர் ஆனந்த் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டனர். கேரள மாநிலத்தைச் சேர்ந்த 4 அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.