/tamil-ie/media/media_files/uploads/2022/08/Kanal-Kannan.jpg)
சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி: கொடைக்கானல் சுற்றுலா தளத்தில், காட்டு யானைகள் வனப்பகுதிக்குள் இடம் பெயர்ந்ததால் பேரிஜம் ஏரிக்கு செல்ல சுற்றுலாப்பயணிகளுக்கு வனத்துறை அனுமதி அளித்துள்ளது.
செங்கோட்டையன் பேட்டி: ஈரோடு சத்தியமங்கலத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சரும் அதிமுக முத்த தலைவர்களில் ஒருவருமான செங்கோட்டையன், 2026 என்பது திருப்புமுணையை உருவாக்குகிற நாளாக அமையும் என்று கூறியுள்ளார்.
-
Mar 07, 2025 21:50 IST
திருப்பரங்குன்றம்: சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு; கனல் கண்ணனுக்கு முன் ஜாமீன் - ஐகோர்ட் உத்தரவு
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்ததில், இந்து முன்னணி நிர்வாகியும் சண்டைப் பயிற்சி இயக்குநருமான கனல் கண்ணனுக்கு நிபந்தனை முன்ஜாமின் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. தனது பேஸ்புக் மற்றும் எக்ஸ் கணக்கில் பதிவேற்றம் செய்யப்பட்ட புகாருக்குரிய பதிவு நீக்கப்பட்டுள்ளது என கனல் கண்ணன் தரப்பு தகவல் தெரிவித்துள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமை சென்னை மதுரவாயல் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன்ஜாமின் வழங்கப்பட்டது.
-
Mar 07, 2025 18:18 IST
பாம்பன் மீனவர்களுக்கு இலங்கையில் நீதிமன்றக் காவல்
நேற்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 14 பாம்பன் மீனவர்களுக்கு, மார்ச் 14-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டுள்ளது. மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மீனவர்கள், வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர்.
-
Mar 07, 2025 16:08 IST
மணல் குவாரிக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!
சிதம்பரம் அருகே அத்தியாநல்லூரில் உள்ள தனியார் மணல் குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குவாரியில் இருந்து அதிக அளவில் மணல் எடுப்பதால், விவசாயம் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்தனர். உரிய தீர்வு கிடைக்காவிட்டால் அத்தியாநல்லூர் சுங்கச்சாவடி அருகே சாலை மறியலில் ஈடுபட மக்கள் முடிவு செய்துள்ளனர்.
-
Mar 07, 2025 15:45 IST
மன்னார்குடியில் புதிய பேருந்துநிலையம் - உதயநிதி ஸ்டாலின் ஆய்வு
தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் புதிய பேருந்துநிலையம் அமைக்கும் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது, அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா, மாவட்ட ஆட்சியர் மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனர்.
-
Mar 07, 2025 15:17 IST
அமித் ஷா போஸ்டர் சர்ச்சை: பா.ஜ.க மறுப்பு
மத்திய அமைச்சர் அமித் ஷா வரவேற்பு போஸ்டரில் நடிகர் சந்தான பாரதி புகைப்படம் ஒட்டப்பட்டதற்கு பா.ஜ.க தரப்பில் மறுப்பு தெரிவித்துள்ளது. அரக்கோணத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷாவை வரவேற்று ஒட்டப்பட்ட போஸ்டரால் சர்ச்சையானது. 'சந்தான பாரதி புகைப்படம் உள்ள போஸ்டருக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை' என பா.ஜ.க நிர்வாகி அருள்மொழி தெரிவித்தார். யாரோ திட்டமிட்டு செயல்பட்டுள்ளதாக பா.ஜ.க மாநில செயற்குழு உறுப்பினர் அருள்மொழி பேட்டி அளித்தார்.
-
Mar 07, 2025 14:54 IST
மூன்றாவது மொழியாக ஹிந்தி படிப்பதில் என்ன தவறு: பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி
"தாய்மொழியில் கட்டாயம் கல்வி பயில வேண்டும். இரண்டாவது மொழியாக ஆங்கிலம் இருக்கட்டும், மூன்றாவது மொழியாக ஹிந்தி படிக்கட்டும் எனக் கூறுவதில் என்ன தவறு என்று நாகர்கோவிலில் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியுள்ளார்.
-
Mar 07, 2025 13:51 IST
தொண்டரை அறைந்தது ஏன்? முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆவேசம்
பல கட்சிகளுக்கு சென்று வந்த மாஃபா பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்ததால் கன்னத்தில் அறைந்தேன். மாவட்ட செயலாளராக நான் இருக்கும்போது மாஃபா பாண்டியராஜனுக்கு சால்வை அணிவித்தால் விட்டுவிடுவேனா என்று சிவகாசியில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார்.
-
Mar 07, 2025 13:18 IST
இ.டி. ரெய்டு திசை திருப்பும் நடவடிக்கை: உதயநிதி ஸ்டாலின்
மும்மொழி கொள்ளை, தொகுதி வரையரை, நிதிப்பகிர் உள்ளிட்ட விஷயங்களில், தமிழ்நாடு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருவதால், ஒன்றிய அரசு தங்களது ஏஜெண்டுகளான இ.டி-வை வைத்து ரெய்டு நடத்தி திசை திருப்ப பார்க்கிறார்கள் என்று திருவாரூரில் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்.
-
Mar 07, 2025 13:02 IST
தெருநாய்கள் கடித்து குதறியதால் 18 ஆடுகள் உயிரிழப்பு
ஆடுகள் மரணம் குறித்து பெருந்துறை வட்டாட்சியரிடம் முறையிட வந்த விவசாயிகள் திடீர் கைது போலீசார் - கிராமமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு பரபரப்பு ஆகியுள்ளது.
-
Mar 07, 2025 13:00 IST
போலீஸ் அதிகாரிகளை முற்றுகையிட்டு மக்கள் வாக்குவாதம்
பஞ்சமி நிலத்திலும் அதிகாரிகள் துணையோடு மணல் அள்ளப்படுவதாக மக்கள் குற்றச்சாட்டு. குவாரிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய மக்கள் வலியுறுத்தல்
-
Mar 07, 2025 12:45 IST
பாதயாத்திரையாக கோவிலுக்கு படையெடுக்கும் பக்தர்கள்
மாசி திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள். காவடி எடுத்தும் பால்குடம் சுமந்தும் அலகு குத்தியும் நேர்த்திக்கடன்
-
Mar 07, 2025 12:33 IST
போக்சோ வழக்கில் சிறுமிகளை விசாரணைக்கு அழைத்து செல்ல கிராம மக்கள் எதிர்ப்பு
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே போக்சோ வழக்கில் சிறுமிகளை விசாரணைக்கு அழைத்து செல்ல கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பெண் காவலர்கள் ஓட்டம் பிடித்தனர். பள்ளி மாணவிகளை சிலர் பாலியல் சீண்டல் செய்ததாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில், 8 பேரை போலீசார் கைது செய்தனர்., சிறுமிகளை விசாரணைக்காக அழைத்துச் செல்ல பெண் காவலர்கள் கிராமத்திற்கு சென்றனர். அப்போது கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் காவலர்கள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.
-
Mar 07, 2025 12:20 IST
மாணவர் மீது சொகுசு கார் மோதல்
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற மாணவர் மீது சொகுசு கார் மோதல் மறைந்திருந்து மாணவர் மீது சொகுசு கார் மோதியதாக மாணவனின் தாய் புகார்
-
Mar 07, 2025 11:37 IST
ஈமு பார்ம் உரிமையாளருக்கு 10 ஆண்டு தண்டனை
கோவை பொருளாதார குற்ற வழக்கில் 10 ஆண்டு தண்டனை பெற்றுள்ளார் பிரகாஷ் ஈமு பார்ம் உரிமையாளர் சரண்.
-
Mar 07, 2025 11:34 IST
ஆனைமலையில் புதிய சாலைகள் - நிறுத்தப்படும்
ஆனைமலை புலிகள் சரணாலயம் வழியாக புதிய சாலை அமைக்கும் பணிகள் உடனடியாக நிறுத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம்
-
Mar 07, 2025 10:27 IST
உடல் எடையை குறைக்க நடைப்பயிற்சி மேற்கொள்ளும் புதுச்சேரி IRBN போலீசார்
முதலமைச்சர், அமைச்சர்கள் வீடுகளில் ஒரே இடத்தில் அமர்ந்து பணியாற்றி வரும் இவர்களின் உடல் எடை அதிகரித்துள்ளதால், உடற்பயிற்சி அளிக்குமாறு டிஜிபி ஷாலினி சிங் உத்திரவிட்டிருந்தார்.
-
Mar 07, 2025 10:25 IST
உதகை அருகே அரசு பேருந்து விபத்து
உதகை அருகே அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு திடீரென உடல் நலக்குறைவு
ஏற்பட்டதால், பேருந்தை சாமர்த்தியமாக வனப் பகுதிக்குள் விட்டு 60 பயணிகளின்
உயிரைக் காப்பாற்றியுள்ளார். பேருந்தின் முன்பகுதி சேதமடைந்த நிலையில், ஓட்டுநர் உள்பட 4 பேருக்கு லேசான காயம். ஓட்டுநரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்தில்
இருந்து தப்பியதாக பயணிகள் தெரிவித்தனர். -
Mar 07, 2025 10:24 IST
CISF ஆண்டுவிழா - அமித்ஷா பங்கேற்று உரை
ராணிப்பேட்டை மத்திய தொழில் பாதுகாப்புப் படையின் 56 ஆவது ஆண்டு விழாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்று உரையாற்றி வருகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.