Coimbatore, Madurai, Trichy News Updates: திருநீர்மலை ரங்கநாத பெருமாள் கோவில் தேரோட்ட விழா கோலாகலம்!

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்து கொள்ள தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் இணைய பக்கத்துடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
2

மழை எச்சரிக்கை: தூத்துக்குடி, நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Advertisment

ரம்ஜான் ரயில் முன்பதிவு: ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு, மார்ச் 27,28 மற்றும் 31 ஆகிய தேதிகளில் தாம்பரம் – கன்னியாகுமரி, தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ள நிலையில், இந்த ரயில்களுக்கான முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது,

  • Mar 23, 2025 18:54 IST

    தேனி: காட்டு மாடு தாக்கி வனக்காவலர் உயிரிழப்பு

    தேனி மாவட்டத்தில் காட்டு மாடு முட்டியதில் பலத்த காயமடைந்த வனக்காவலர் சின்ன கருப்பன் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கடந்த 4 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.



  • Mar 23, 2025 18:07 IST

    கடலூரில் ஊசியால் குழந்தைக்கு பாதிப்பு - புகார்

    கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தில் 9 மாத குழந்தைக்கு காலாவதியான ஊசி மருந்தை செலுத்தியதாக தனியார் மருத்துவமனை மீது புகார் எழுந்துள்ளது. குழந்தையின் உடல்நிலையில்  மாற்றம் ஏற்பட்டதை அடுத்து மருத்துவமனையை முற்றுகையிட்டு உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



  • Advertisment
    Advertisements
  • Mar 23, 2025 17:18 IST

    கள்ளக்குறிச்சி அருகே நீரில் மூழ்கி உயிரிழந்த மாணவன்

    கள்ளக்குறிச்சி அருகே விடுமுறை தினத்தை ஒட்டி நண்பர்களுடன் அணைக்கட்டு பகுதியில் குளிக்கச் சென்ற 11ம் வகுப்பு மாணவன் புகழேந்தி நீரில் மூழ்கி உயிரிழந்தான். இந்த சம்பவம் தொடர்பாக கச்சிராயப்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Mar 23, 2025 15:50 IST

    மாடு முட்டியதில் பார்வையாளர் உயிரிழப்பு

    புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் மாடு முட்டியதில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்தார்.



  • Mar 23, 2025 15:21 IST

    மின்னல் தாக்கி ஆடுகள் உயிரிழப்பு

    கிருஷ்ணகிரியில் மின்னல் தாக்கியதில் 21 ஆடுகள் மற்றும் ஒரு மாடு உயிரிழந்தது. இதைத் தொடர்ந்து, உயிரிழந்த ஆடுகளை மருத்துவ அதிகாரி பரிசோதனை செய்தார். மேலும், கால்நடைகள் உயிரிழந்ததால், அரசு சார்பில் நிவாரணம் வழங்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



  • Mar 23, 2025 14:36 IST

    உளுந்தூர்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து விபத்து: 20 பேர் படுகாயம்

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 20 பேர் படுகாயமடைந்தனர். நிச்சயதார்த்தத்திற்கு சென்ற வேன் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து நடந்துள்ளது.



  • Mar 23, 2025 14:32 IST

    கோவையில் குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில்  பேருந்து நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை

    குற்ற சம்பவங்களை தடுக்கும் வகையில்  பேருந்து நிலையத்தில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் போலீசார்  30க்கும் மேற்பட்ட போலீசார் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகள், பேருந்துகளில் சோதனை மேற்கொண்டு வருவதால், அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.



  • Mar 23, 2025 14:29 IST

    தற்கொலை செய்துகொள்ள முயன்ற இளைஞரை, காப்பாற்றிய மதுரை காவலர்

    மதுரை: கடன் பிரச்னையால் தற்கொலை செய்துகொள்ள முயன்ற இளைஞரை, துரிதமாக செயல்பட்டுக் காப்பாற்றிய காவலர்கள். அவருக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர். இளைஞரை காப்பாற்றிய காவலர்கள் ரமேஷ், அய்யனார், லட்சுமணன் ஆகியோருக்கு சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார் மாநகரக் காவல் ஆணையர் .



  • Mar 23, 2025 13:27 IST

    விடுமுறை தினம்: திருவண்ணாமலையில் குவிந்த பக்தர்கள் கூட்டம்

    ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல், திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நீண்ட வரிசையில் 4 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர்.



  • Mar 23, 2025 13:24 IST

    தமிழகத்தின் 8 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை மையம்

    திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும். அதேபோல் தமிழகத்தின் ஒரு சில இடங்கள், புதுச்சேரி​ மற்றும் காரைக்காலில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.



  • Mar 23, 2025 12:29 IST

    நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ. கொலை செய்யப்பட்ட வழக்கு - மேலும் ஒருவர் கைது

    நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ. ஜாகிர் உசேன் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலை வழக்கில் சரணடைந்த அக்பர்ஷாவின் சகோதரரான பீர் முகமது என்பவர் கொலைக்கு உதவியதாக கைது செய்யப்பட்டுள்ளார். வழக்கு தொடர்பாக இருவர் சரணடைந்த நிலையில் மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்



  • Mar 23, 2025 12:08 IST

    மதுரை படுகொலை சம்பவம்; அன்புமணி ராமதாஸ் கண்டனம்

    சிறையிலிருந்து தீட்டப்பட்ட சதியை கூட தடுக்க முடியாமல் தி.மு.க அரசு குறட்டை விட்டு தூங்குகிறது. தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை தனக்கன்குளத்தில், நள்ளிரவில் நடந்த படுகொலை சம்பவம் தொடர்பாக அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்



  • Mar 23, 2025 11:44 IST

    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சு திடீர் ஆய்வு

    கோவை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். குறைகளை கேட்டு அறிந்து உடனடி தீர்வு காண அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். வெறி நாய் மற்றும் பாம்பு கடிக்கான மருந்துகள் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், சிகிச்சை பெற்று வீடு திரும்பிய நோயாளியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்



  • Mar 23, 2025 11:31 IST

    கோவை தனியார் கல்லூரி விடுதியில் சீனியர் மாணவர் மீது ஜூனியர் மாணவர்கள் தாக்குதல்

    கோவை மதுக்கரையில் உள்ள தனியார் தொழில்நுட்ப கல்லூரி விடுதியில் சீனியர் மாணவர் மீது ஜூனியர் மாணவர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜூனியர் மாணவர்களின் அறைக்குள் புகுந்து சீனியர் மாணவர் பணத்தை திருடியதாக கூறி தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் வீடியோ வைரலாகி வருகிறது. தாக்குதல் தொடர்பாக ஜூனியர் மாணவர்கள் 13 பேரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது



  • Mar 23, 2025 11:08 IST

    மதுரை படுகொலை சம்பவம்; கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைப்பு

    மதுரை தனக்கன்குளத்தில், முன்னாள் தி.மு.க மண்டல தலைவர் வி.கே.குருசாமியின் ஆதரவாளர் காளீஸ்வரன் மர்மநபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். நள்ளிரவில் நடந்த படுகொலை சம்பவத்தில் கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 



  • Mar 23, 2025 10:22 IST

    கோயில் திருவிழா- ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பு

    புதுக்கோட்டையில் கோயில் திருவிழாவில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வாடிவாசலில் இருந்து சீறிப்பாயும் காளைகள் 700 காளைகள், 300 மாடு பிடி வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.



  • Mar 23, 2025 10:21 IST

    மின்னல் தாக்கி 21 ஆடுகள் ஒரு மாடு பலி

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே நேற்று இரவு இடி, மின்னல் தாக்கியதில் 21 ஆடுகள் மற்றும் ஒரு பசு மாடு உயிரிழந்தன. 



  • Mar 23, 2025 09:56 IST

    லாரி விபத்து

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே டயர் வெடித்ததில் தீ பற்றி சரக்கு லாரி எரிந்தது. 



  • Mar 23, 2025 09:55 IST

    பாம்பு கடித்து சிறுவன் பலி

    திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையம் அடுத்த ஏரிக்குப்பம் பகுதியில், விளை நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த 12 வயது சிறுவன் ரவிக்குமார் பாம்பு கடித்து உயிரிழந்தார்.  பாம்பு கடித்து நேற்று முன்தினம் பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 



  • Mar 23, 2025 09:33 IST

    விருதுநகரை குளிர்வித்த மழை

    விருதுநகரில் காலை முதல் நல்ல மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.



  • Mar 23, 2025 09:32 IST

    மதுரையில் ரவுடி சரமாரியாக வெட்டிக் கொலை

    மொட்டமலை பகுதியில் ரவுடி காளீஸ்வரன் மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். நேற்றிரவு வீட்டின் வெளியே வந்த காளீஸ்வரனை 3 பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் வெட்டிஅன்ர். காளீஸ்வரன் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார். முன்விரோதம் காரணமாக காளீஸ்வரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் வீசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



  • Mar 23, 2025 09:29 IST

    மழை நிலவரம்

    தமிழகத்தில் இன்று காலை 11 மணி வரை 10 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், திருவண்ணாமலை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

     



Tamilnadu News Latest

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: