/indian-express-tamil/media/media_files/iq4iKiqvpqkHUybekadJ.jpg)
மேட்டூர் அனையின் நீர்மட்டம்: மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 749 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 108.25 அடியாகவும், நீர் இருப்பு 75.947 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
சுட்டு பிடித்த காவல்துறை: மதுரை தனிப்படை காவலர் மலையரசன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த மூவேந்திரன் என்பவரை, காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டு பிடித்த நிலையில், தற்போது அவர் மதுரை அரசு மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 19-ந் தேதி காவலர் மலையரசன், சாலையோரம் எரித்து கொலை செய்யப்பட்டார்.
-
Mar 24, 2025 21:12 IST
திருப்பரங்குன்றம்: மத மோதலை தூண்டும் வகையில் சமூக உடகங்களில் பதிவு; அண்ணாமலை மீது வழக்குப்பதிவு
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மத மோதலை தூண்டும் விதமாக சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் அளித்த புகாரின் பேரில், சேலம் மாநகர சைபர் கிரைம் போலீசார் பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்தனர்.
-
Mar 24, 2025 18:29 IST
200 கிலோ அளவில் கெட்டுப்போன பழங்கள் பறிமுதல்
சிவகங்கையில் உள்ள பழக்கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சுமார் 200 கிலோ அளவில் கெட்டுப்போன பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
-
Mar 24, 2025 16:19 IST
சிதம்பரம் அருகே கரை ஒதுங்கிய மர்மப்பொருள்: மீனவர்கள் அச்சம்
சிதம்பரம் அருகே கடற்கரையில் மிதவை போன்ற மர்மப்பொருள் ஒன்று ஒதுங்கியதால் மீனவர்கள் அச்சமடைந்த நிலையில், போலீசார், கடலோர காவல்படையினர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். பெரிய பந்து போன்ற அந்த பொருளில் மாலத்தீவு என்று அச்சடிக்கப்பட்ட எழுத்துக்கள் தெரிவதால் கடல் எல்லை பகுதிக்கு பயன்படுத்தப்படும் மிதவை பொருளாக இருக்கலாம் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
-
Mar 24, 2025 14:39 IST
மதுரை: 1,200 கிலோ தர்பூசணி பழங்கள் பறிமுதல்
மதுரை மாநகர் பி.பீ.குளம் உழவர்சந்தை அருகே தர்பூசணி விற்பனைக் கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீரென ஆய்வில் ஈடுபட்டனர். சாயம் ஏறப்பட்ட 1200 கிலோ தர்பூசணிப் பழங்களைப் பறிமுதல் செய்து அழித்து வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனர்.
-
Mar 24, 2025 14:15 IST
விழுப்புரத்தில் தங்கும் விடுதியில் தீ விபத்து
விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள தங்கும் விடுதியில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினர் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியை மேற்கொண்டனர். தீயணைக்கப்பட்டு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
-
Mar 24, 2025 14:13 IST
திண்டிவனம்: ஆம்னி பேருந்து மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம் அருகே ஆம்னி பேருந்து மீது அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானது. இன்று காலை நாய் சாலையின் குறுக்கே சென்றதால் ஆம்னி பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்ததால், ஆம்னி பேருந்தின் பின்னால் வந்த கார் மோதியதுடன், காரின் பின்னால் மற்றொரு ஆம்னி பேருந்து மோதி விபத்து ஏற்பட்டது. காரின் உள்ளே இருந்த 5 பேர் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
-
Mar 24, 2025 14:07 IST
கோவை: த.வெ.க.-வின் போஸ்டரால் பரபரப்பு
தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் விரைவில் நடைபெற உள்ள நிலையில் 2026-ல் தமிழகத்தை ஆளப்போறோம் என்ற வாசகத்துடன் கோவையில் ஒட்டப்பட்டு உள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை புறநகர் கிழக்கு மாவட்ட தலைவர் பாபு தலைமையில், பொதுக் குழுவில் கூட போறோம், தளபதி தலைமையில் 2026-ல் தமிழகத்தை ஆளப்போறோம் என்று கோவை முழுவதும் பொதுக் குழுவுக்கு போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளது.
-
Mar 24, 2025 13:29 IST
உதகை-குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில் இயக்கம்
கோடைக் காலத்தை முன்னிட்டு உதகை-குன்னூர் இடையே சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மார்ச் 28-ஆம் தேதி முதல் ஜூலை 7-ஆம் தேதி வரை வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் திங்கள் ஆகிய நாட்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Mar 24, 2025 13:24 IST
"திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது"
திருப்பரங்குன்றம் மலை அனைவருக்கும் சொந்தமானது; கடவுள்கள் எல்லாம் சரியாகத் தான் இருக்கிறார்கள்; சில மனிதர்கள் தான் சரியில்லை என்று திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.
-
Mar 24, 2025 13:12 IST
அரசுப்பள்ளி ஆண்டுவிழாவில் சரித்திர பதிவேடு குற்றவாளி?
திருப்பத்தூர் கன்றாயனப்பல்லி அரசுப் பள்ளி ஆண்டுவிழாவில் சிறப்பு விருந்தினராக சரித்திர பதிவேடு குற்றவாளி கலந்துகொண்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். 2 வருடங்களுக்கு முன்பு 100 சவரன் நகை கொள்ளை வழக்கில் கணேஷை தமிழகம் வந்து ஆந்திர போலீசார் கைது செய்திருந்தனர்.
-
Mar 24, 2025 12:41 IST
வெறிநாய் கடித்து 7 பேர் காயம்
கன்னியாகுமரி: ஆரல்வாய்மொழி எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் வெறிநாய் கடித்து 7 பேர் காயம் அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
Mar 24, 2025 12:31 IST
மதுபோதையில் போலீசிடம் வாக்குவாதம் செய்த இளைஞர்கள்
சேலம் மாவட்டம் ஏற்காட்டில், மதுபோதையில் சிறப்பு காவல் ஆய்வாளருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். சேர்வராயன் கோவில் பகுதியில் ரோந்து பணிக்கு சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் முருகன், அங்கு மது அருந்திக் கொண்டிருந்த சிலம்பரசன், பிரவீன்குமார் இருவரையும் எச்சரித்தாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த இருவரும், சிறப்பு உதவி ஆய்வாளர் முருகனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, அவரை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
-
Mar 24, 2025 12:19 IST
மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி - 4 பேர் படுகாயம்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மின்சாரம் பாய்ந்து ஒருவர் பலி - 4 பேர் படுகாயம். பொது இடத்தில் இருந்த கொடிக்கம்பத்தை அகற்றும் போது விபரீதம். சிங்காரப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
Mar 24, 2025 12:11 IST
ரவுடி ஜான் கொலை வழக்கில், மேலும் ஒருவர் நீதிமன்றத்தில் சரண்!
ஈரோடு: ரவுடி ஜான் கொலை வழக்கில், கிச்சிபாளையத்தை சேர்ந்த கோகுல சுகவனேஷ்வரன் என்பவர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரண்! இவ்வழக்கில், 3 பேரை துப்பாக்கிச் சூடு நடத்தியும், ஒருவரை உணவகத்திலும் போலீசார் கைது செய்தனர். 2 பேர் ஏற்கனவே நீதிமன்றத்தில் சரணடைந்திருந்த நிலையில், இன்று மேலும் ஒருவர் சரண்!
-
Mar 24, 2025 11:59 IST
ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்
திருச்சி விமான நிலையத்தில் கோலாலம்பூரில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல். 5 கிலோ உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் - சுங்கத்துறை அதிகாரிகள் நடவடிக்கை. கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானத்தில் திருச்சி வந்த பயணியின் உடமையை சோதனையிட்ட போது சிக்கியது
-
Mar 24, 2025 11:41 IST
சுற்றுலா பயணிகளை விரட்டிய காட்டு யானையால் பரபரப்பு
காட்டு யானையை படம் எடுக்க முயன்ற சுற்றுலா பயணிகள். காரை தாக்க முயன்ற யானையால் அதிர்ச்சி.
-
Mar 24, 2025 10:54 IST
ஐபிஎல் தொடர்: கள்ளச்சந்தையில் டிக்கெட்
ஐபிஎல் தொடர் கள்ளச்சந்தையில் டிக்கெட் விற்பனை செய்த 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
Mar 24, 2025 10:13 IST
பொன்னேரி தாலுகாவை பிரிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை - தங்கம் தென்னரசு பதில்
பொன்னேரி தாலுகாவை பிரிக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்துள்ளேன். நிதியமைச்சர் நிதி ஒதுக்கினால், நிச்சயம் பிரிக்க வாய்ப்பு உள்ளது என எம்.எல்.ஏ. சுதர்சனம் கூறியுள்ளார்.வட்டங்கள் பிரிப்பதற்கான கோரிக்கைகள் பல வந்திருக்கின்றன. நிதி நிலைக்கு ஏற்ப இதில் நடவடிக்கை எடுக்கப்படும் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளித்துள்ளார்.
-
Mar 24, 2025 09:45 IST
கொடைக்கானலில் பனி படர்ந்த காட்சி
கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் படர்ந்திருந்த பனி சூரிய ஒளிபட்டதும் ஆவியாகி செல்லும் காட்சி பார்ப்போர் கண்களை கவர்ந்தது.
-
Mar 24, 2025 09:44 IST
பிரியாணி விருந்து
ஒசூர் முனீஸ்வரன் கோயில் திருவிழாவில் பிரியாணி விருந்து நடைபெற்றது. பக்தர்கள் பங்கேற்று சாப்பிட்டு சென்றனர்.
-
Mar 24, 2025 09:19 IST
அம்பேத்கர் சிலையை அகற்ற எதிர்ப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே, அம்பேத்கர் சிலையை அகற்ற கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலையை , அதிகாரிகள் அகற்ற வந்த போது போராட்டம் நடத்தினர்.
-
Mar 24, 2025 09:18 IST
மேட்டூர் அணை நீர் நிலவரம்
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 749 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் மட்டம் 108.25 அடியாகவும், நீர் இருப்பு 75.947 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
-
Mar 24, 2025 09:18 IST
குடியிருப்புகளில் புகுந்த யானை
கோவை மேட்டுப்பாளையம் அருகே இரவு நேரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் ‘பாகுபலி’ என அழைக்கப்படும் காட்டு யானை, தோட்டப்பகுதிக்குள் நுழைந்து இரும்பு கேட்-ஐ உடைத்துச் சென்றுள்ளது.
-
Mar 24, 2025 09:17 IST
காவலரை கொன்றவர் சுட்டுப்பிடிப்பு
சில நாட்களுக்கு முன்பு எரிந்து நிலையில் கொலை செய்யப்பட்ட காவலரை கொன்ற குற்றவாளி போலீசாரால் சுட்டு பிடித்தனர். பணத்தை பறிக்க முயன்ற ஆட்டோ டிரைவர் மூவேந்திரனுக்கும் ஏற்பட்ட தகராறில் காவலர் மலையரசன் எரித்து கொலை என தகவல் தெரிவித்தது. மதுரை ஈச்சனேரி பகுதியில் இருந்து நிலையில் காவலர் மலையரசன் உடல் மார்ச் 19 மீட்கப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.