Tamilnadu Coimbatore Two Wheeler Accident 3 Persons Injury இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து, குழந்தைகள் படுகாயம்: பதற வைக்கும் சிசிடிவி காட்சி | Indian Express Tamil

இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து, குழந்தைகள் படுகாயம்: பதற வைக்கும் சிசிடிவி காட்சி

சோமனூர் சாலையை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக கல்லூரி மாணவர்கள் வந்த இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.

இருசக்கர வாகனங்கள் மோதி விபத்து, குழந்தைகள் படுகாயம்: பதற வைக்கும் சிசிடிவி காட்சி

இருசக்கர வாகனத்தில் குழந்தைகளுடன் சாலையை கடக்க முயன்ற பெண் மற்றொரு இரு சக்கர வாகனம் மோதி தூக்கி வீசப்பட்ட இரு குழந்தைகள் உட்பட மூன்று பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விபத்து தொடர்பான சிசிடிவி வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி கணபதி நகர் பகுதியில் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி மல்லிகா இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இதனிடையே இன்று காலை மல்லிகா தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு பள்ளிக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

அப்பொழுது சோமனூர் சாலையை கடக்க முயன்ற போது எதிர்பாராத விதமாக கல்லூரி மாணவர்கள் வந்த இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில் மல்லிகாவுடன் பயணித்த இரண்டு குழந்தைகளும் இரு சக்கர வாகனத்தில் வந்த கல்லூரி மாணவர்களும் தூக்கி வீசப்பட்டனர்.

இதனை அடுத்து அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும் விபத்து குறித்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இருசக்கர வாகனங்கள் மோதும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

அதில் மல்லிகா தனது இரண்டு குழந்தைகளுடன்  சாலையை கடக்க முயல்வதும் கல்லூரி மாணவர்கள் வந்த இருசக்கர வாகனம் பயங்கரமாக மோதி சிதறுவதும் அதில் அனைவரும் தூக்கி வீசப்படும் பதை பதைக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளது.

பி.ரஹ்மான். கோவை மாவட்டம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu coimbatore two wheeler accident 3 persons injury