காதலர் தின முன்னிட்டு கோவை காந்திபுரம். பெரியார் படிப்பகத்தில் காதலர் தின கொண்டாட்டம் நடைபெற்றது. காதலித்து திருமணம் செய்து கொண்ட இளம் ஜோடிகள் பங்கேற்ற இந்த கொண்டாட்டத்தில், பலர் பங்கேற்றிருந் நிலையில், கலப்பு திருமணம் செய்துகொண்டவர்கள் நலச்சங்கம் சார்பில் இந்த காதலர் தின விழா நடைபெற்றது. இதில் காதல் செய்வீர்!! காதல் செய்வீர், சாதி மதம், ஒழிந்துடவும் காதல் செய்வீர்! சமத்துவமும் நிலைத்திடவே காதல் செய்வீர் என்ற முழக்கங்களை எழுப்பி காதலர் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து கேக் வெட்டி காதலர் தினம் கொண்டாடிய இளம் ஜோடிகள் முத்தமிட்டு , புகைப்படம் எடுத்துக்கொண்டு அன்பை வெளிப்படுத்தினர். தொடர்ந்து பேசிய காதலர்கள் சாதி மறுப்பு , மதம் மறுப்பு கடந்து காதல் செய்ய வேண்டும். காதலால் அனைவரும் நன்றாக இருப்போம். பெரியார் அம்பேத்கர் போன்றவர்கள் பல நல்வழிகளை கருத்துக்களையும் பெண்களுக்கு எடுத்து வைத்துள்ளனர். அதனைப் பின்பற்றி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று தெரிவித்தனர்..
இந்நிலையில் அனுமதி இன்றி கோவை வ.உ.சி. மைதானத்தில் காதலர் தினம் கொண்டாட முயன்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த 20 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். காவல் துறையின் அனுமதியின்றி, கேக் வெட்டி காதலர் தினம் கொண்டாட முயன்றதால் அவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட அவர்கள் காவல் வாகனத்தில் ஏற்றப்படும் போது காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.