/indian-express-tamil/media/media_files/2025/09/21/chennai-race-course-2025-09-21-07-59-18.jpg)
சென்னையில் ராஜாஜி சாலையில் உள்ள எம்.சிங்காரவேலர் மாளிகையில் செயல்பட்டு வரும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், கிண்டியில் உள்ள மெட்ராஸ் ரேஸ் கிளப் வளாகத்தில் உள்ள ஒரு புதிய வளாகத்திற்கு மாற்றப்படும் என்றும், தற்போது உள்ள இடத்தில் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் அரசு உத்தரவில், கிண்டி ரயில் நிலையத்திற்கு அருகில் 1.43 ஹெக்டேர் நிலத்தை இந்தத் திட்டத்திற்காக ஒதுக்கியுள்ளது. புதிய வசதி சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு எதிரே உள்ள அலுவலகத்தை மாற்றும்.ராஜாஜி சாலையைச் சுற்றியுள்ள கடுமையான இடநெருக்கடிகள் மற்றும் போக்குவரத்து சிக்கல்களை மீண்டும் மீண்டும் மதிப்பாய்வுகள் செய்து எடுத்துக்காட்டியதை அடுத்து, அதிகாரிகள் இந்த மாற்றத்தை முடிவு செய்துள்ளனர்.
ஒவ்வொரு நாளும் 2,100 க்கும் மேற்பட்ட மனுக்கள் மற்றும் விண்ணப்பங்கள் பெறப்படுவதால், வளாகம் எப்போதுமே கூட்ட நெரிசலுடன் காணப்படுகிறது. இதன் காரணமாக பொதுமக்களின் குறைகள், நலத்திட்டங்கள் மற்றும் நிர்வாகப் பணிகளை சீராகக் கையாள்வதைத் தடுக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை சீர் செய்யும் வகையில், புதிய ஆட்சியர் அலுவலகம், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை அலுவலகங்கள் உள்ளிட்ட முக்கிய துறைகளை ஒன்றிணைத்து, பொது காத்திருப்பு அரங்குகள், விசாரணை அறைகள் மற்றும் டிஜிட்டல் சேவை கவுண்டர்கள் போன்ற மேம்பட்ட வசதிகளை வழங்கும்.
கிண்டியில் உள்ள இடம் சிறந்த சாலை, ரயில் மற்றும் மெட்ரோ இணைப்புடன் எளிதில் வந்து செல்லக்கூடிய வகையில் இருப்பதாக கருதப்படுகிறது. இந்த நில மாற்றத்திற்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது மற்றும் இந்த மாற்றத்திற்கான விரிவான திட்டமிடல் தற்போது நடந்து வருகிறது. கட்டுமானப் பணிகள் முடியும் வரை எம். சிங்காரவேலர் மாளிகையில் தற்போதைய செயல்பாடுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், கலெக்டரேட் அலுவலகம் மாற்றப்பட்டதும், உயர் நீதிமன்றத்தின் சுமையைக் குறைக்க ராஜாஜி சாலை வளாகம் பல மாடி நீதித்துறை வளாகமாக மறுவடிவமைப்பு செய்யப்படும்.
நகரத்தில் உள்ள நீதித்துறை உள்கட்டமைப்பு பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில், துணை நீதிமன்றங்கள் மற்றும் அது தொடர்புடைய அலுவலகங்களை இடமளிக்கும் வகையில் இந்தப் புதிய வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.