Advertisment

கோவை அருகே மாணவிக்கு ஆபாச படம் அனுப்பிய பேராசிரியர் சஸ்பெண்ட்

Tami News Update : மாணவிக்கு ஆபாச படம் அனுப்பிய விவகாரத்தில் கல்லூரி பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

author-image
WebDesk
New Update
கோவை அருகே மாணவிக்கு ஆபாச படம் அனுப்பிய பேராசிரியர் சஸ்பெண்ட்

Tamilnadu News Update : கோவை அருகே கல்லூரி மாணவிக்கு ஆபாச படம் அனுப்பிய கல்லூரி இணை பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

கோயம்புத்தூர் மாவட்டம் பேரூர் அருகே உள்ள ஒரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ் துறையின் இணை பேராசிரியர் ஒரு மாணவிக்கு ஆபாச படங்களை அனுப்பியதாக புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் இணை பேராசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், விசாகா கமிட்டி மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்ய சம்பந்தப்பட்ட கல்லூரி விசாரணை குழுவை அமைத்துள்ளது.

இது தொடர்பாக கல்வி நிறுவனத்தின் செயலாளர் வெளியிட்ட வெளியிட்டுள்ள அறிவிப்பில், பேராசிரியர் கே.திருநாவுக்கரசு ஒரு மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக முன்னாள் மாணவர் சதீஷ்குமார் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தொடர்பாக 3 நாட்களில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகம் பேராசிரியருக்கு அவகாசம் கொடுத்தது. இதன்படி கடந்த செப்டம்பர் 27 அன்று, பேராசிரியர் இந்த புகார் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் கடிதத்தை நிர்வாகத்திடம் சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.

ஆனால் பேராசிரியரின் விளக்கம் "திருப்திகரமாக" இல்லை என அறிவித்த கல்லூரி நிர்வாகம், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்யக் கோரி, முன்னாள் மாணவர்களுடன் சேர்ந்து மாணவர்கள் புதன்கிழமை (நேற்று) கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக மாணவர்கள் சார்பில் கூறுகையில், தனது நண்பர்களுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்து கொண்ட மாணவிக்கு பேராசிரியர் சட்டை இல்லாமல் இருக்கும் ஒரு புகைப்படம் உட்பட சமூக ஊடக படங்கள் மூலம் அனுப்பியுள்ளார்.

இதனால் சிறுமி மனநிலை பாதிக்கப்பட்டதாக புகார் அளித்ததை அடுத்து கல்லூரி நிர்வாகத்திடம் பேராசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம்-ல் பேசிய ஒரு மாணவர், பேரூர் காவல்நிலையத்தில் பாதிக்கப்பட்டவரிடமிருந்து எந்த புகாரும் பெறவில்லை என்று கூறினார். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு கைது என எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் கூறிப்பிட்டுள்ளார்.

ஆனால் காவல்துறையினர் தரப்பில், இந்த விவகாரத்தில் எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை என்றும் கல்லூரி நிர்வாகம் ஒரு குழுவை அமைத்துள்ளது, குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என கூறியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil News Update Sexual Harassment
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment