Advertisment

மாணவி பாலியல் வன்கொடுமை: களத்தில் இறங்கிய கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

அண்ணா பல்கலைகழக நிர்வாகத்தின் அலச்சியத்தால் இந்த கொடுமை நடந்துள்ளது, தமிழகத்தின் சிறந்த பல்கலைகழகமாக இருக்கும் அண்ணா பல்கலைகழகத்தில இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது,

author-image
WebDesk
New Update
student Protest

சென்னை அண்ணா பல்கலைகழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கை வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக இந்த வழக்கு குறித்து பல்வேறு தரப்பினர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

Advertisment

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்தில் பயின்று வரும் மாணவி ஒருவர், தனது நண்பருடன் கல்லூரி வளாகத்தில் மாணவி பேசிக்கொண்டு இருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் மாணவரை தாக்கி, மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட மாணவி, கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளைக் ஆய்வு செய்த நிலையில், மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரம் தொடர்பாக ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் காவல் துறையினர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இதனிடையே, ஞானசேகரன் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான எப்.ஐ.ஆர் பதிவு ஆன்லைனில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ வழக்குகளில் பாதிக்கப்பட்ட நபரின் விவரங்களை வெளியிடக் கூடாது என்ற சட்டம் உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர், முகவரியுடன் கூடிய எஃப்.ஐ.ஆர் பதிவு வெளியாகியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக சென்னை காவல்துறை ஆணையர், அருண் கூறியிருந்தார்.

Advertisment
Advertisement

மேலும், அரசியல் கட்சி தலைவர்கள், மாணவி பாலியல் தொல்லை, மற்றும் முதல் தகவல் அறிக்கை வெளியானது குறித்த கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்து வரும் நிலையில், கல்லூரி மாணவர்கள், இந்திய மாணவர்கள் சங்கம் ஆங்காங்கே போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை நந்தனம் கல்லூரியில் இந்திய மாணவர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில், மாணவர்கள், காவல்துறைக்கு எதிராக பேசிய நிலையில், காவல்துறையினரை நம்பி மாணவி புகார் கொடுத்திருக்கிறார். ஆனால், அந்த புகார் குறித்து முதல் தகவல் அறிக்கை வெளியானது காவல்துறையின் மீதும் தான் தவறு இருக்கிறது. அதனால் அவர்களுக்கும் தண்டனை கொடுக்க வேண்டும். பாதுகாப்புகள் இருந்தாலும், ஒரு பெண் தனியாக வெளியில் நடக்க முடியாத சூழல் தான் இப்போதும் இருக்கிறது.

இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்யப்பட்டு உரிய தண்டனை வழங்க வேண்டும். அண்ணா பல்கலைகழக நிர்வாகத்தின் அலச்சியத்தால் இந்த கொடுமை நடந்துள்ளது, தமிழகத்தின் சிறந்த பல்கலைகழகமாக இருக்கும் அண்ணா பல்கலைகழகத்தில இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது, வெளி மாவட்டம் மற்றும் மாநிலங்களில் இருந்து இங்கு படிக்கும் மாணவ மாணவிகளுக்கு, அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment