குமரி மாவட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பார்வதி புரம் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் பேசுகையில்,
மார்த்தாண்டத்தில் உள்ள மேம்பாலத்தின் உறுதித் தன்மை, தாங்கும் சக்தியை விரிவான ஆய்வு செய்யவேண்டும். குமரியை சேர்ந்த பொன். இராதாகிருஷ்ணன் இணை அமைச்சராக இருந்த காலத்தில் இந்த பாலம் கட்டப்பட்டது. மார்த்தாண்டம் பாலம் பணி நடக்கிற காலத்திலே தேசிய நெடுஞ்சாலை துறை (NAHI) தரமான பொருட்களை பயன்படுத்தி பாலம் பணிகள் நடைபெறுகிறாதா என்ற கேள்வி எழுந்தது.
அதற்கு காரணம் மார்த்தாண்டத்தில் கட்டப்படுவதை போன்ற இதை தொழில் நுட்பத்தில் கொல்கத்தாவில் கட்டிய பாலம்,குஜராத்தில் கட்டிய பலங்கள் இடிந்து விழுந்தது.மோடி ஆட்சியில் இதுவரை நான்கிங்கிற்கும் அதிகமான பாலங்கள் இடிந்ததை இந்த நாடு பார்த்தது. மார்த்தாண்டம் பாலம் பணிககள் முடிந்து ஆண்டுகள் பல கடந்தாலும் அந்த பாலம் தேசிய நெடுஞ்சாலை துறையின் கட்டுப்பாட்டில்தான் இப்போதும் இருக்கிறது. தமிழக அரசிடம் முறையாக ஒப்படைக்கப்படவில்லை.
மேம்பாலத்தின் வழியாக அதிக சுமை ஏற்றிய கனிமங்கள் எடுத்து செல்லும் வாகனங்கள் தினசரி அதிக எண்ணிக்கையில் பயணிப்பதுதான் பாலத்தின் வலிமையை சிதைத்துள்ளது. குமரி மாவட்ட நிர்வாகம் இது குறித்து நீதிமன்றத்தை அணுகியும், கனிமங்களை எடுத்துச் செல்லும் கனரக வாகனங்களை கட்டுப்படுத்த முடியாத நிலையே தொடர்கின்றது. மாவட்ட ஆட்சியர் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என கனகராஜ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“