Advertisment

தி.மு.க- அ.தி.மு.க இடையே தான் போட்டி: ஒப்புக்கொண்டு குழப்பிய ஜி.கே வாசன்

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க-விற்கும், அ.தி.மு.கவிற்கும்தான் போட்டி என்று ஜி.கே.வாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
sasasa
Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் தி.மு.க-விற்கும், அ.தி.மு.கவிற்கும்தான் போட்டி என்று ஜி.கே.வாசன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

மக்களவை தேர்தலில், ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் பா.ஜ.க கூட்டணியில் போட்டியிடுகிறது. ஈரோடு, ஸ்ரீபெரும்பத்தூர், தூத்துக்குடி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த ஜி.கே வாசன், “ வருகின்ற மக்களவை தேர்தலில் போட்டி என்பது தி.மு.கவிற்கும், அ.தி.மு.கவிற்கும் என்றுதான் கூறுகிறார்கள். அதில் எங்களுக்கு எந்த மாற்று கருத்தும் கிடையாது. இதை 100 % ஏற்றுக்கொள்கிறேன். காரணம், மக்கள் விரோத போக்கை கையாண்டவர்களுக்கு, எதிர்மறை வாக்கு யாருக்கு கிடைக்கும் என்பதில் ஒரு போட்டியிருக்கிறது. இதைதான் நானும் கூறினேன்” என்று பேசியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment