மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக வழக்கறிஞர் சுதா போட்டியிடுவார் என அகில இந்திய காங்கரஸ் கட்சி அறிவித்துள்ளது.
இந்தியாவில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 8 தொகுதிகளுக்கு ஏற்கனவே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நெல்லை மற்றும் மயிலாடுதுறை தொகுதிகளுக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதில், தொடர் இழுபறி நீடித்து வந்தது.
இந்நிலையில், நெல்லை மக்களவைத் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளராக ராபர்ட் புரூஸ் நேற்று அறிவிக்கப்பட்டார். ஆனால், மயிலாடுதுறை வேட்பாளரை அறிவிப்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சியின் சார்பில் மயிலாடுதுறை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக வழக்கறிஞர் ஆர்.சுதா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் மகிளா காங்கிரஸ் தலைவியாக பதவி வகித்து வருகிறார்.
மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதிக்கு காங்கிரஸின் மிகப்பெரிய ஆளுமைகளுக்குள் கடும் போட்டி நிலவிய நிலையில் கடைசியில் சென்னையைச் சேர்ந்த சுதாவை களம் இறக்கியது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“