Tamilnadu Congress – BJP twitter clash over The Kashmir files movie: தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படம் தொடர்பாக, தமிழக காங்கிரஸ் மற்றும் பாஜகவினர் மாறி மாறி கருத்துக்களை தெரிவித்து வருவது ட்விட்டரில் பேசு பொருளாகியுள்ளது.
தமிழக பாஜக, தி காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படத்தை தமிழகத்தில் திரையிட முடிவு செய்து பொது வெளியில் அறிவித்ததற்கு, காங்கிரஸ் எதிர் வினையாற்றியுள்ளனர். மார்ச் 16ஆம் தேதி மாலை கோயம்பேடு ரோகினி திரையரங்கில் படத்தின் சிறப்புக் காட்சிக்கு தமிழக பாஜக ஏற்பாடு செய்திருந்தது.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அழைப்பிற்கு பதிலளித்த தமிழ்நாடு காங்கிரஸின் ஊடக ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த் செந்தில், மாநில பாஜக தலைவர் அண்ணாமலையைக் குறிப்பிட்டு, வெறுப்பை room போட்டு பரப்புவதை தவிர வேற ஏதாவது பண்ணுவீங்களா என்று கேட்டுள்ளார்.
அண்ணாமலையின் அழைப்பை வலதுசாரி ட்விட்டர்வாசிகள் வரவேற்றுள்ள நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் பாஜக ஆட்சியின் போது "பர்சானியா" திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டதை காங்கிரஸ் கட்சியினர் நினைவுபடுத்தி வருகின்றனர். அந்தப் படம் கோத்ரா வன்முறைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது.
இதையும் படியுங்கள்: அண்ணாமலைக்கு புரிதல் இல்லை: முறைகேடு புகார்களுக்கு செந்தில் பாலாஜி பதில்
இந்நிலையில், சென்னை கோயம்பேடு ரோகினி திரையரங்கில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, பொதுச் செயலாளர் கரு நாகராஜன், துணைத்தலைவர் வி.பி.துரைசாமி உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பார்த்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வி.பி.துரைசாமி, தமிழ்நாட்டில் உள்ள எட்டு கோடி மக்களும் இந்த திரைப்படத்தை பார்க்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். மேலும், படத்தைப் பார்த்தவுடன் தமக்கு தேசப்பற்று இன்னும் அதிகரித்தாகவும், ஒவ்வொரு திமுக தொண்டனும் இந்த படத்தை பார்த்தால் ஒரு புதிய பாடத்தை கற்றுக்கொள்வார்கள் எனவும் குறிப்பிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil