/indian-express-tamil/media/media_files/2025/09/29/selv-2025-09-29-10-55-55.jpg)
கோவையில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை கூறுகையில், இன்று மீண்டும் கரூர் செல்கிறோம் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணங்களும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவியும் வழங்குவதற்கு ஏற்பாடு செய்கிறோம். டெல்லியில் இருந்து ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுனா கார்கேவும் சிறப்பு பிரதிநிதிகளை அனுப்பி உள்ளார்கள்.
விசாரணை குறித்து நீதிமன்றம் முடிவு செய்யும் முதலமைச்சர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்துள்ளார். அதிமுக ஆட்சியிலும் அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் அமைத்தது அனைவருக்கும் தெரியும். நேர்மையாக விசாரிக்க கூடிய நீதி அரசரை முதலமைச்சரை நியமித்திருக்கிறார்.
முதலமைச்சர் கரூர் விஷயத்தில் மின்னல் வேகத்தில் செயல்பட்டு நிவாரணம் ஆணையம் அமைத்தது பல மாவட்டங்களில் இருந்து மருத்துவர்கள் அழைத்து வந்து இன்னும் உயிர் சேதங்கள் இல்லாமல் தடுத்து இருப்பது பாராட்டிற்குரிய விஷயம். விஜய் 20 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை அறிவித்தது குறித்தான கேள்விக்கு அது அவருடைய விருப்பம் அதைப்பற்றி நாம் என்ன கூற முடியும்?.
கரூர் சம்பவத்தில் அரசியல் தலையீடு இருப்பதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்திருப்பது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த செல்வ பெருந்தகை, பிணத்தின் மீது அரசியல் செய்பவர்கள் இதுபோன்று ஏதாவது பேசிக் கொண்டிருப்பார்கள், இந்த அரசியல் அநாகரிகமான செயல். 40 பேர் உயிரிழந்துள்ளனர், அப்படி இருக்கும்போது இது போன்ற எண்ணங்கள் வருமா இதுபோன்ற எண்ணங்கள் வந்தால் சிறந்த அரசியல் தலைவர்களாக இருக்க முடியுமா?.
விசாரணை ஆணையம் உள்ளது உண்மை எல்லாம் வெளியில் வரும் அப்பொழுது யார் மீது தவறு என்று தெரியும் விசாரணை முடியட்டும் விசாரணை முடிந்து அறிக்கை வெளியிடப்படும் அதன் பிறகு நாம் பேசுவோம். எடுத்தோம் கவுத்தோம் என்று அரசியல் தலையீடு என்று பேச வேண்டாம். நாங்களும் யாரையும் குறை சொல்லவில்லை, மிகப்பெரிய மரணம் நடந்து துயரத்தில் இருக்கிறோம். இந்த சூழலில் மலிவான அரசியல் செய்வதை அரசியல் தலைவர்கள் தவிர்க்க வேண்டும்.
விஜயும் நிர்வாகிகளும் கரூர் சென்று பார்க்காதது குறித்தான கேள்விக்கு, மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என பதிலளித்தார். இந்த ஆணையத்தால் எந்த தீர்வும் வராது என்றும் சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருப்பது குறித்தான கேள்விக்கு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் எடப்பாடி பழனிச்சாமி இதே அருணா ஜெகதீசன் அவர்களை தான் நியமித்தார் என்றும் அது எந்த நம்பிக்கையில் நியமித்தார்கள் என்று கேள்வி எழுப்பினார்.
அதிமுக ஆட்சியின் பொழுதும் அருணா ஜெகதீசனை ஆணையத்தின் தலைவராக நியமித்தார்களா இல்லையா? அப்பொழுது நீதி கிடைக்காது என்று அவர்கள் நியமித்தார்களா? இதனை முதலில் அதிமுக கூட்டணியில் இருப்பவர்களை கேட்க சொல்லுங்கள் அதன் பிறகு நான் பதிலளிக்கிறேன் என்று தெரிவித்து புறப்பட்டார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.