காங்கிரஸ் மாநில தலைவர் பதவி கொடுத்தால் ஏற்பேன் என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளது அவரது பேராசை என்று எம்.பி. திருநாவுக்கரசர் கூறிள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சி மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில், பாராளுமன்ற உறுப்பினர்கள் திருநாவுக்கரசர், கார்த்தி சிதம்பரம் மற்றும் ஜோதி மணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய திருநாவுக்கரசர், ’மத்திய அரசு யோக்கியமாக இருப்பது போல் அவர்களுக்கு பிடிக்காதவர்கள், காங்கிரஸ் கட்சி, அதனுடன் கூட்டணி வைத்திருக்கும் திமுக அரசாங்களை தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு சோதனைகள நடத்தி வந்தனர்.
ஆனால் இன்று மத்திய அரசின் அதிகாரிகளே 20 லட்சம் ரூபாய் லஞ்சத்துடன் கையும் களவுமாக பிடிபட்டு இருப்பதாக செய்தி வருகிறது. மத்திய அரசின் நிர்வாகம் எவ்வளவு மோசமாக நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இது ஒரு உதாரணம்.
திமுக, காங்கிரஸ் இடையே தற்போதுள்ள கூட்டணி தொடரும். சில கட்சிகள் உள்ளே வரலாம்.
கட்சித் தலைவராக வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் சொன்னால் அது அவரின் பேராசை. தலைவர் ஆக வேண்டும் என ஆசைப்படுவது நியாயம் தானே. காங்கிரஸ் என்பது தேசியக் கட்சி. அதில் மாநிலத் தலைவர் பதவி என்பது யாருக்கும் ஆயுளுக்கான பதவி கிடையாது. யார் வந்தாலும் குறிப்பிட்ட வருடங்கள் பதவியில் இருப்பார்கள், என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“