scorecardresearch

சாவர்க்கர் பிறந்த நாளில் நாடாளுமன்ற கட்டிடத்தை திறப்பதா? கே.எஸ் அழகிரி கண்டனம்

புதிய பாராளுமன்ற கட்டிட திறப்பு விழாவுக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை அழைக்காமல் பிரதமர் மோடி அவமானப்படுத்தியிருக்கிறார் என காங்கிரஸ் கட்சி அறிக்கையில் தெரிவித்துள்ளது.

alagiri

சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை திறப்பதைவிட இந்திய மக்களுக்கு செய்யும் தூரோகம் வேறு எதுவும் இல்லை என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, “தாழ்ந்த நிலையிலும், கடுமையான கடன் சுமையிலும் சிக்கியிருந்த தமிழகத்தை மீட்டெடுத்து வளர்ச்சிப்பாதையில் அழைத்து செல்வதற்கான முயற்சிகளை கடந்த 2 ஆண்டுகளாக தமிழகத்தின் முதலமைச்சர் திரு மு.க. ஸ்டாலின் எடுத்து வருகிறார்.

புதிய முதலீடுகளையும், புதிய தொழில் நுட்பங்களையும் கொண்டு வர முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான குழுவினர் ஒன்பது நாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டதை கொச்சைப்படுத்துகிற வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்திருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.

அ.தி.மு.க. ஆட்சியில் முதலீட்டிற்கு உகந்த மாநிலம் தமிழகம் இல்லை என்ற நிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போட்ட பல நிறுவனங்கள் வேறு வேறு மாநிலங்களுக்கு சென்றுவிட்டதை எவரும் மறுக்க முடியாது. இதற்கு அ.தி.மு.க. ஆட்சியில் நிலவிய ஊழலும், நிர்வாகச் சீர்கேடும் தான் காரணம்.

நாட்டின் மிக உயர்ந்த பதவிகளுக்கு தலித், ஆதிவாசிகளை நியமித்ததாக தம்பட்டம் அடித்துக்கொண்ட பிரதமர் மோடி, பாராளுமன்ற கட்டிட திறப்புவிழாவுக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்முவை அழைக்காமல் அவமானப்படுத்தியிருக்கிறார். இதன்மூலம் மோடியின் சுயரூபத்தை அனைவரும் அறிந்துகொள்ளலாம். இதன்மூலம் இந்திய விடுதலை போராட்டத்தை கொச்சைப்படுத்திய சாவர்க்கரின் பிறந்தநாளில் புதிய பாராளுமன்ற கட்டிடத்தை திறப்பதை விட இந்திய மக்களுக்கு செய்கிற துரோகம் வேறு எதுவும் இருக்க முடியாது.’ என தெரிவித்துள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Tamilnadu congress leader k s alagiri press release new parliamentary building