மாநாட்டில் மயங்கி விழுந்த ப.சிதம்பரம்: உடல்நிலை குறித்து கார்த்தி சிதம்பரம் தகவல்!

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் 84-வது தேசிய மாநாடு ஏப்ரல் 8-9 தேதிகளில் குஜராத்தில் நடைபெறுகிறது.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் 84-வது தேசிய மாநாடு ஏப்ரல் 8-9 தேதிகளில் குஜராத்தில் நடைபெறுகிறது.

author-image
WebDesk
New Update
P Chidambaram N

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய நிதி அமைச்சருமாக ப.சிதம்பரம், நிகழ்ச்சியில் பேசிக்கொண்டிருக்கும்போது மயங்கி விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரது உடல் நிலை குறித்து அவரது மகனும் எம்.பியுமான கார்த்தி சிதம்பரம் உக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Advertisment

மத்தியில் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் நிதியமைக்கராக பொறுப்பில் இருந்தவர் ப.சிதம்பரம். தமிழகத்தின் காரைக்குடி பகுதியை சேர்ந்த இவர், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருக்கிறார். இதனிடையே ப.சிதம்பரம், குஜராத் மாநிலத்தில் நடைபெற்று வரும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி மாநாட்டில் பங்கேற்க அகமதாபாத் சென்றிருந்தார்.

இதில், சபர்மதி ஆசிரமத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிக் கொண்டிருந்த அவர், திடீர் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த கட்சியின் தொண்டர்கள், உடனடியாக அவரை அருகில் இருந்த மருத்துவமனை கொண்டு சென்று சேர்த்துள்ளனர். டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிகழ்வு காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment
Advertisements

இதனிடையே தனது தந்தையின் உடல்நிலை குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கார்த்தி சிதம்பரம், எனது தந்தை அகமதாபத்தில் நிலவும் கடுமையான வெப்பம் மற்றும் நீரிழப்பு காரணமாக மயங்கி விழுந்தார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. அவர் மருத்துவர் கண்காணிப்பில் இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு காங்கிரஸ் வட்டாரத்தில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் அதிக வெப்பம் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக இது நிகழ்ந்தது. தற்போது சோதனைகள் எடுக்கப்பட்டுள்ளது. அனைத்து முடிவுகளும் உடல் இயல்பு நிலையில் இருப்பதையே காட்டுகிறது என்று ப.சிதம்பரமமும் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ப.சிதம்பரத்தின் உடல்நிலை குறித்து கார்த்தி சிதம்பரத்திடம் விசாரித்துள்ளார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் 84-வது தேசிய மாநாடு ஏப்ரல் 8-9 தேதிகளில் குஜராத்தில் நடைபெறுகிறது. கடந்த 64 ஆண்டுகளில் இந்த மாநாடு குஜராத்தில் நடைபெறுவது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 

P Chidambaram

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: