Advertisment

உள்ளாட்சி தேர்தல் : காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் மோதல் : 4 பேர் படுகாயம்

Tamilnadu Localbody Election : தமிழக உள்ளாட்சி தேர்தல் குறித்து தேவக்கோட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் மோதல் வெடித்துள்ளது.

author-image
WebDesk
New Update
உள்ளாட்சி தேர்தல் : காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் மோதல் : 4 பேர் படுகாயம்

Tamilnadu Congress Members Clash In Sivagangai : தமிழகத்தில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் குறித்து சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் நடைபெற்ற காங்கிரஸ் ஆலோசனை கூட்டத்தில் மோதல் வெடித்த நிலையில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Advertisment

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு வரும் அக்டோபர் 6 மற்றும் 9-ந் தேதி என இரண்டு கட்டங்களாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலுக்காக வேட்புமனுதாக்கல் கடந்த 15-ந் தேதி தொடங்கி 21-ந் தேதி நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து 9 மாவட்ட வேட்பாளர்கள் என அனைவரும் தேர்த்தல் பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளனர்.

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் உறுப்பினர்களின் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. காஙகிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், தேவக்கோட்டை முன்னாள் நகரமன்ற செயலாளர் வேலுச்சாமியின் ஆதரவாளர்கள் தங்கள் ஒதுக்கப்படுவதாக கூறி வாக்குவாத்த்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து எம்பி கார்த்திக் சிதம்பரம் சமாதானம் பேசிச்கொண்டிருக்கும்போதே அவரது ஆதரவாளர்களும், வேலுச்சாமியின் ஆதரவாளர்களும் கடுமையான வாக்குவாத்தில் ஈடுபட்டனர். ஒருகட்டத்தில் வாக்குவாம் எல்லைமீறி சென்ற நிலையில், கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் நாற்காலி எடுத்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இந்த தாக்குதலில் 4 பேர் படுகாயமடைந்து தேவக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து தேவக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu Election 2021
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment