By: WebDesk
Updated: December 27, 2020, 10:57:12 AM
முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான டி. யசோதா அவர்கள் இன்று காலை 6.30 மணியளவில் உடல்நலக் குறைவால் மரணமடைந்தார்.
இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பாக ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்றத் தொகுதியில் 1980, 1984, 2001, 2006 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வெளியிட்ட செய்திக் குறிப்பில், ” முன்னாள் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான D. யசோதா அம்மையார் அவர்களின் மறைவிற்கு எங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டது.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ” முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,முன்னாள்
சட்டமன்ற காங்கிரஸ் துணை தலைவரும்,காமராஜர் அறக்கட்டளையின் அறங்காவலருமான திருமதி டி.யசோதா அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்திஅறிந்து அதிர்ச்சியடைந்த்தேன். ஆழ்ந்தஇரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். அவரதுஇழப்பு காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பாகும்” என்று தெரிவித்தார்.
பெருந்தலைவர் வழிவந்தவர் ,அன்னை சோனியா காந்தியின. நம்பிக்கை , தமிழ்நாடு காங்கிரஸ் அறக்கட்டளையின் அறங்காவலர், மூத்த தலைவி
திருமதி. யசோதா (Ex) MLA அவர்கள் மறைவு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன் என்று விருதுநகர் காங்கிரஸ் எம். பி மாணிக்கம் தாகூர் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்தார்.
உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சைப் பலனின்றி இன்று காலை உயிரிழந்தார்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Tamilnadu congress veteran ex mla d yasodha amma demise