தமிழக முதல்வர் ஸ்டாலின், உலகின் மிகச்சிறந்த அரசியல்வாதியாக திகழ்கிறார் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈவகேஎஸ் இளங்கோவன் பாராட்டு தெரிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் தற்போது முக்கயத்துவம் பெற்றுள்ளது. கூட்டணி கட்சியாக இருந்தாலும், திமுகவை கடுமையாக விமர்சனம் செய்யும் ஒருவராக அறியப்படும் இவர் தற்போது பாராட்டு தெரிவித்துள்ளது திமுகவினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சேலத்தில் டீ கடை திறப்பு விழாவில் பங்கேற்ற .ஈ,வி,கே.எஸ் இளங்கோவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில்,
சேலம் மாநகராட்சியில், கூட்டணி தர்மத்தை ஏற்று துணை மேயர் பதவியை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கிய திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்தக்கொள்கிறேன். திமுக ஆட்சி பொறுப்பேற்ற 9 மாதங்களில் ஸ்டாலின் சிறப்பாப ஆட்சி செய்து வருகிறார். கடுமையாக உழைத்து வரும் அவர் உலகின் சிறந்த அரசியல்வாதியாக திகழ்கிறார்.
மேலும் தேர்தல் நேரத்தில் முதல் கொடுத்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியுள்ளார். நிறைவேற்றப்படாமல் இருக்கும் வாக்குறுதிகளை விரைவில் நிறைவேற்றுவார். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ1000, குடும்ப தலைவிகள் பெயரில் வீடுகள் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் தமிழகம் இந்தியாவிவேயே முதன்மை மாநிலமாக வர ஸ்டாலினுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
மேகதாது அணை பிரச்சினையில், நாங்கள் 100 சதவீதம் எதிர்ப்பை தெரிவித்துள்ளோம். இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம். தமிழக பட்ஜெட் மக்களுக்குரிய பட்ஜெட்டாக இருக்கும். பாலியல் குற்றவாளிகளுக்கு கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் முன் ஓ.பன்னீர்செல்வம் இதுவரை ஆஜராகவில்லை. பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாதது ஏன் என தெரியவில்லை. ஜெயலலிதா இறந்தது எப்படி என மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்'' என ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil