Tamilnadu CPI Leader Nallakkannu Confirmed Corana Positive : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணுவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சற்று குறைந்து வந்த கொரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பலருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லக்கண்ணுவுக்கு இன்று கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்ட்டுள்ளது.
95 வயதான இவர் தற்போது சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தொற்று பாதிப்பு காரணமாக அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது நுரையீரலில் லேசான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். மேலும் வயது மூப்பு காரணமாக மருத்துவர்கள் அவருக்கு கவனத்துடன் சிகிச்சை அளித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களையும், கூட்டணி கட்சி வேட்பாளர்களையும் ஆதரித்து நல்லக்கண்ணு பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil