DMK Duraimurugan News In Tamil : இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் குடும்பத்தினர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், கடந்த ஜனவரி மாதம் முதல் கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதனால் கொரோனா தொற்றில் இருந்து ஓரளவு விடுபட்டுவிட்டதாக மக்கள் நினைத்துக்கொண்டிருந்த நிலையில், கடந்த சில வாரங்களாக இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது.
இதன் மூலம் இந்தியாவில் கொரோனா தொற்று தனது 2-வது அலையை தொடங்கியுள்ள நிலையில், பல மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வரும் நிலையில், பல பகுதிகளில் இரவு மற்றும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மக்களிடையே மீண்டும் கொரோனா தாக்கம் குறித்து அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் அதிகபட்சமாக மராட்டிய மாநிலத்தில் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மேலும் இன்று முதல் தமிழகத்திலும் புதி கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்து.
இந்நிலையில், கடந்த மாதம் முதல் தமிழகத்தில் நடைபெற்று வந்த தேர்தல் பிரச்சாரத்தில். திமுக பொதுச்செயலாளர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். மேலும் வேலூர் காட்பாடி தொகுதியில் போட்டியிட்ட அவர், 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனால் கொரோனா தன்னை தாக்காது என்று நம்பிக்கொண்டிருந்த துரைமுருகனுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தடுப்பூசி போட்ட பிறகும் கொரோனா தாக்கியதால் துரைமுருகன் அதிர்ச்சியடைந்தார்.
இதனைத் தொடர்ந்து சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தனது வீட்டில் தனிமைபடுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். ஆனால் தற்போது மேலும் அதிர்ச்சியளிக்கும் விதமாக, துரைமுருகனின் மகனும் வேலூர் எம்பியுமான கதிர் ஆனந்த் மற்றும் துரைமுருகனின் தம்பி துரைசிங்காரம் ஆகியோருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால் துரைமுருகன் குடும்பம் பெரும் அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், கதிர் ஆனந்த் சென்னையிலுள்ள வீட்டிலும் துரைசிங்காரம் காட்பாடியில் உள்ள வீட்டிலும் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று தனது 2-வது அலையை தொடங்கியதில் இருந்து, நடிகர்கள் விளையாட்டு வீரர்கள், அரசியல் பிரபமுகர்கள் என பலர் கொரோனா தொற்றால் பாதிப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்த பட்டியலில் துரைமுருகன் குடும்பத்தினரும் இணைந்துள்ளது திமுக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil