நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்: தமிழகத்தில் அனுமதி மறுக்கப்பட்டவை எவை?

Tamilnadu Corana Update : தமிழகத்தில் பெருகிவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது.

Tamil Nadu Government Covid 19 New Guidelines : தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு சார்பில் புதிய விதிமுறைகள் அறிவிக்கபட்டுள்ளது.

சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு உலகம் முழுவதும் தீவிர தாக்குதலை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பை தடுக்க உலக நாடுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள்  மேற்கொண்டு வரும் நிலையில், ஒரு வருடத்திற்கு மேலாகியும் இந்த வைரஸ் பாதிப்பு குறைந்த பாடில்லை. மேலும் பல நாடுகளில் இந்த வைரஸ் தாக்கம் 2-வது மற்றும் 3-வது அலை வீசி வருகிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் முதலாக இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு, மத்திய அரசின் தீவிர தடுப்பு நடவடிக்கையின் காரணமாக சில மாதங்களுக்கு முன்பு வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டது. அதன்பிறகு இந்திய அரசு சார்பில் கண்டறியப்பட்ட கொரோனா தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் முதல் மக்களுக்கு செலுத்தப்பட்டு வரும் நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒருபுறம் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்து வரும் நிலையில் மறுபுறம் தொற்று பரவல் அதிகரித்து வருகிறது.

இதனால் இந்தியாவின் பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை சுகாதாரத்துறை மறுத்து வந்த நிலையில், இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வழிமுறை குறித்து பிரதமர் மோடி மாநில அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து தற்போது தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய விழிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி

  • மத்திய அரசினால் நீடிக்கப்பட்ட விமான போக்குவரத்துக்கான தடை தொடரும்.
  • கொரோனா பரவலை கருத்தில் கொண்டு திருவிழாக்கள் மற்றும் மதம் சார்த்த கூட்டங்களுக்கு ஏப்ரல் 10-ந் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது.
  • கோயம்பேடு வணிக வளாகத்தில் சில்லரை வியாபார காய்கறிகள் அங்காடிகள் மட்டும்  செயல்பட தடை விதிக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களிலும் இதே தடை தொடரும்.
  • தொழிற்சாலைகள், வணிகவளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், மற்றும் உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள் அலுவலர்கள் மற்றும் பொதுமக்களின் உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்யப்படுவதையும், முககவசம் அணிவதையம் உறுதி செய்தபின்னரு அனுமதிக்க்ப்பட வேண்டும். முக்கவசம் அணியாமல் இருப்பவர்களை அனுமதிக்க கூடாது
  • கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதை கருத்தில்காண்டு புதுச்சேரி, ஆந்திரா மற்றும் கர்நாடகா பேருந்துகளில் உள்ள இருக்கைளில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். நின்றுகொண்டு பயணம் செய்ய அனுமதிக்க கூடாது.
  • உணவகங்கள் மற்றும் தேநீர் கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இரவு 11 மணிக்கு மேல் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. பார்சல் சேவைக்கு மட்டுமே அனுமதி.
  • பொழுபோக்கு பூங்காக்கள், பெரிய அரங்குள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படுகிறது.
  • அனைத்து திரையரங்குளிலும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி
  • பார்வையாளர்கள் இன்று விளையாட்டு போட்டிகள் நடத்த அனுமதி

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu corana update tamil nadu government covid 19 new guidelines

Next Story
பணத்தில் மிதப்பதுதான் தமிழ் தேசிய அரசியலா? சீமானுக்கு எதிராக முக்கிய நிர்வாகி வீடியோnaam tamilar katchi, நாம் தமிழர் கட்சி, naam tamilar katchi seemaan, naam tamilar katchi aruliniyan, நாம் தமிழர் கட்சி நிர்வாகி அருளினியன், சீமான் மீது விமர்சனம், சீமான், aruliniyan slams Seeman video, aruliniyan questions luxury is tamil nationalism, பணத்தில் மிதப்பதா தமிழ்த் தேசிய அரசியல்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com