இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்து வருகிறது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியை கடந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்றுக்கு தடுப்பூசி செலுத்தும் பணியும் தொடர்ந்து வருகிறது.
ஆனாலும் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் உச்சத்தை கடந்து வரும் நிலையில், நாடு முழுவதும் உள்ள கொரோனா மருத்துவமனைகளில் நோயாளிகளின் வருகையில் நிரம்பி வழிகிறது. இதில் பல பகுதிகளில் மருத்துவமனைகளில் படுக்கை வசதி இல்லாமல், பல நோயாளிகள் மருத்துவமனை வாயிலில் காத்திருக்கும் அவலநிலையும் ஏற்பட்டுள்ளது. இதில் தமிழகத்திலும் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது.
தற்போதைய நிலையில், தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 15 லட்சத்தை நெருங்கி வருகிறது. இதில் பலி எண்ணிக்கை 16 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பல மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. இந்தியா முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யம் வகையில், நாடு முழுவதும் சில தொழிற்சாலைகளில் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஆனாலும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் ஏற்கனவே 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இன்று மேலும் 3 பேர் உயிரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில அதிக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக உள்ள சென்னையில், பல நோயாளிகள் ராஜீவ்காந்தி அரசு மருத்தவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த மருத்துவமனையில் ஆக்ஸிஜன் படுக்கைகள் பற்றாக்குறை உள்ள நிலையில், 3 நோயாளிகள் ஆம்லன்சிலேயே உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த மருத்துவமனையில உள்ள 845 படுக்கைகள் முழுவதும் நோயாளிகளால் நிரம்பி வழிகிறது. இதனால் புதிதாக வரும் நோயளிகளுக்கு படுக்கைகள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், ஆம்புலன்சிலேயே வைத்து சிகிச்சை அளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் படுக்கைக்காக ஆம்புலன்சில் காத்திருந்த 3 பேர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இன்று உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் 20 நோயாளிகள் மருத்துவமனையில் படுக்கைக்காக ஆம்புலன்சில் காத்திருப்பதாகவும், உடனடியாக மருத்தவமனையில் படுக்கை வசதிகளை அதிகரித்து கொரோனா நோயாளிகளை காப்பாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே செங்கல்பட்டு அரசு மருத்துவனையில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 13 நோயாளிகள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், நேற்று சென்னை ராஜீவ்காந்தி மருத்தவமனையில் 6 பேர் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்துள்ளனர். தற்போது அதே மருத்துவமனையில் மேலும் 3 பேர் ஆக்ஸிஜன் பற்றக்குறையால் உயிரிழந்த சம்பவம் மக்களிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil