கொரோனா: தினசரி தொற்று பாதிப்பு விகிதம் 2.35%

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24 லட்சத்து 96 ஆயிரத்து 287 ஆக அதிகரித்துள்ளது.

chennai corona cases

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை, 3867 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து தொற்று பாதித்து சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 35,294 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் மொத்தமாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,96,287 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து ஒரே நாளில் 4,382 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 24,27,988 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் ஒரே நாளில் 72 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 33,005ஆக உயர்ந்துள்ளது.

கோயம்புத்தூர் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் 400க்கும் குறைவான பாதிப்பு பதிவாகியுள்ளது. கோயம்புத்தூரில் 455 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்தில் 6 பேர் உயிரிழந்தனர். ஈரோடு மாவட்டத்தில் கொரோனா சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 4,227ஆக உள்ளது. புதிதாக 349 பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையில் புதிதாக 222 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்தனர். கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து ஒரே நாளில் 481பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சென்னையில் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 2,168 ஆக குறைந்துள்ளது. இதுவரை சென்னையில் 5,33,432 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில் 5,23,042 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். சென்னையில் நேற்று 27,349 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா பாதிப்பு விகிதம் 0.8% ஆக உள்ளது.

தஞ்சாவூரில் 8 பேரும், சேலம் மாவட்டத்தில் 11 பேரும் கொரோனாவால் உயிரிழந்தனர்.

தமிழகத்தில் உள்ள 46,808 ஆக்சிஜன் படுக்கைகளில் 6,680 படுக்கைகள் நிரம்பியுள்ளன. அதேபோல் 30,765 ஆக்சிஜன் அல்லாத படுக்கைகளில் 3,945 நிரம்பியுள்ளது. மொத்தம் உள்ள 9,717 ஐசியூ படுக்கைகளில் 3,168 நிரம்பியுள்ளன.

105 சுகாதார பணியாளர்கள், 1161 முன்களப் பணியாளர்கள், 18 முதல் 44 வயதுடைய 38,444 பேர், 45-59 வயதுடைய 19,632 பேர் என தமிழகத்தில் மொத்தம் 66,679 பேருக்கு ஒரே நாளில் தடுப்பூசி போடப்பட்டது. இதுவரை தமிழகத்தில் 1,57,41,118 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் 10லட்சம் டோஸ் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு கிடைத்துள்ளதாகவும், மேலும் 61 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் விரைவில் கிடைக்கும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu corona positivity rate falls 2 35

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com