Advertisment

News Highlights : தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 33,658 பேருக்கு கொரோனா

இன்று முதல் சுமார் 2 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி, முதல் தவணையாக 2000 ரூபாய் இன்று முதல் வழங்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
Chennai corona virus, daily reports

Tamil News Today Live : தேர்தல், அரசியல், சமூகம் சார்ந்த செய்திகளை இந்த லைவ் ப்ளாக்கில் காணலாம். உடனுக்குடன் செய்திகளை தமிழில் அறிந்துகொள்ள இந்தத் தளத்துடன் இணைந்திருங்கள்.

Advertisment

புதிய கட்டுப்பாடுகள் அமல் :

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளாவோரின் எண்னிக்கை 32000 ஐ அடைந்த நிலையில், இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாக முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் முழு ஊரடங்கு விதிகளை கடுமையாக அமலாக்குவது குறித்து சட்டமன்றக் கட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்ட நிலையில், கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. காய்கறி, மளிகை கடைகள் நண்பகல் 12 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 10 மணி வரை மட்டுமே செயல்படும். தேநீர் கடைகள் முற்றிலும் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரேசன் கடைகளில் ரூ.2000 கொரோனா நிவாரண நிதி :

திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல, கொரோனா நிவாரண நிதியாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.4000 நிவாரண நிதியை உடனடியாக வழங்கிட, முதலமைச்சராக பொறுப்பேற்ற ஸ்டாலின், இத்திட்டத்துக்கு முதல் கையெழுத்திட்டார். இன்று முதல் சுமார் 2 கோடி ரேசன் அட்டைதாரர்களுக்கு முதல் தவணையாக 2000 ரூபாய் இன்று முதல் வழங்கப்படுகிறது.

கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு செய்த முதலமைச்சர் ஸ்டாலின் :

சென்னை தேனாம்பேட்டையை அடுத்த டிஎம்எஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா கட்டளை மையத்தை நேற்று இரவு முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார். கட்டளை மையத்தில் பணிகளை தொய்வின்றி மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

உருவானது டவ்-தே புயல் :

அரபிக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து புயல் உருவாகி உள்ளது. இந்த புயலுக்கு டவ்-தே என பெயரிடப்பட்டுள்ளது. வரும் மே 18-ம் தேதி குஜராத் கடற்கரைப் பகுதியில் கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” (https://t.me/ietamil)


  • 20:00 (IST) 15 May 2021
    தமிழகத்தில் இன்று 33,658 பேருக்கு கொரோனா

    தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 33,658 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் தமிழகத்தில் இன்று 303 பேர் உயிரிழந்துள்ளனர்.


  • 19:29 (IST) 15 May 2021
    நடிகர் ஜெயம் ரவி கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.10 லட்சம் நிதியுதவி

    கொரோனா தடுப்பு பணிகளுக்காக பல்வேறு பிரபலங்களும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவி கொரோனா தடுப்பு பணிகளுக்காக ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.


  • 19:17 (IST) 15 May 2021
    ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரூ.1 கோடி நிதியுதவி

    தமிழக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். கொரோனா பேரிடரை எதிர்கொள்ள மக்கள் தாராளமாக நிதியுதவி வழங்கவும் ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


  • 18:30 (IST) 15 May 2021
    சேலம் அரசு மருத்துவமனை, மற்றும் தற்காலிக சிகிச்சை மையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் ஆய்வு

    சேலம் அரசு மருத்துவமனை, மற்றும் தற்காலிக சிகிச்சை மையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் ஆய்வு


  • 17:44 (IST) 15 May 2021
    தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    சற்று நேரத்தில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் . கொரோனா பாதிப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கொரோனா நிவாரண நிதிக்கு ஆளுநர் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


  • 17:19 (IST) 15 May 2021
    எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம்

    ஆக்ஸிஜன், ரெம்டெசிவிர் மற்றும் கொரோனா தடுப்பூசிகளை தமிழகத்திற்கு அதிகளவில் ஒதுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். மேலும் தமிழகத்தில் மருத்தவ சேர்க்கைக்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


  • 16:36 (IST) 15 May 2021
    கொரோனா நிவாரணம் வழங்கிய ரவிச்சந்திரன்

    தமிழக்தில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், முதல்வரின் நிவாரண நிதிக்கு பலர் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ரவிச்சந்திரன் தனது ஊதியத்தில் இருந்து 5 ஆயிரத்தை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார்


  • 16:32 (IST) 15 May 2021
    சினிமா கலைஞர்களுக்காக நடிகர் அஜித் நிதியுதவி

    சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திரைப்பட தொழிலாளர் சங்க தலைவர் ஆர்.கே.செல்வமணி சினிமா கலைஞர்களுக்காக நடிகர் அஜித் 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் கொரனோவின் தாக்கம் அதிகரித்து உள்ளதால் மே 31ஆம் தேதி வரை சினிமா மற்றும் சின்னதிரை தொடர்புடைய எந்த நிகழ்விலும் திரைப்பட துறையினர் ஈடுபட மாட்டார்கள் எனவும் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.


  • 15:33 (IST) 15 May 2021
    5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரிய தமிழக அரசு

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மற்றும் இறப்பு விகிதம் அதிகரித்து வரும் நிலையில், கடும் கட்டுப்பாடுகள் அடங்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

    மத்திய அரசிடம் மிருந்து போதிய கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கததால், கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. அதன்படி 5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளியை தமிழக அரசு கோரியுள்ளதாக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.


  • 15:27 (IST) 15 May 2021
    5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரிய தமிழக அரசு

    தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் மற்றும் இறப்பு விகிதம் அதிகரித்து வரும் நிலையில், கடும் கட்டுப்பாடுகள் அடங்கிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

    மத்திய அரசிடம் மிருந்து போதிய கொரோனா தடுப்பூசிகள் கிடைக்கததால், கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரப்படும் என தமிழக அரசு தெரிவித்தது. அதன்படி 5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளியை தமிழக அரசு கோரியுள்ளதாக தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் டெண்டர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.


  • 15:26 (IST) 15 May 2021
    6 சிறப்பு ரயில்கள் தற்காலிகமாக ரத்து - தெற்கு ரயில்வே

    பயணிகள் வருகை குறைவால் தற்காலிகமாக 6 சிறப்பு ரயில் சேவை மே17 முதல் 31 ஆம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.


  • 14:22 (IST) 15 May 2021
    வரும் 28-ம் தேதி ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் - மத்திய நிதியமைச்சர் அறிவிப்பு...!

    மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் வரும் 28-ம் தேதி காணொலி வாயிலாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


  • 14:21 (IST) 15 May 2021
    பிற மாவட்டங்களிலும் கட்டளை மையம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

    சென்னையில் உள்ளதைப் போல பிற மாவட்டங்களிலும் கட்டளை மையம் அமைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.


  • 14:19 (IST) 15 May 2021
    கனமழை பெய்யும் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

    கனமழை பெய்யும் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்


  • 13:49 (IST) 15 May 2021
    6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வருகை...!

    6 லட்சம் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகள் புனேவில் இருந்து சென்னை வந்துள்ளன. அவை தற்போது கொரோனா தடுப்பூசி மாநில மருந்து சேமிப்பு கிடங்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.


  • 12:37 (IST) 15 May 2021
    ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நடிகர் அஜித் நிதியுதவி

    ஃபெப்சி தொழிலாளர்களுக்கு நடிகர் அஜித் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாக பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.


  • 11:56 (IST) 15 May 2021
    கள்ளச்சந்தையில் ரெம்டெசிவர் விற்றால் குண்டர் சட்டம்

    தமிழகத்தில் ரெம்டெசிவர் மருந்து மற்றும் ஆக்சிஜனை பதுக்கி அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.


  • 11:46 (IST) 15 May 2021
    மே 31 வரை திரைத்துறை பணிகள் நிறுத்தம்

    மே 31ஆம் தேதி வரை திரைத்துறை பணிகள் நடைபெறாது என ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார். திரைப்பட தொழிலாளர்களுக்கு முன்னணி நடிகர், நடிகைகள் உதவ முன் வர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.


  • 11:42 (IST) 15 May 2021
    டவ் தே புயல் - வானிலை மையம் எச்சரிக்கை

    டவ் தே புயல் காரணமாக நீலகிரி,கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. குமரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.


  • 11:39 (IST) 15 May 2021
    டவ்-தே புயல் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    டவ்-தே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை தலைமை செயலகத்தில் வானிலை மைய அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.


  • 11:36 (IST) 15 May 2021
    புதிய கல்விக் கொள்கை; மத்திய கல்வி அமைச்சர் ஆலோசனை!

    இந்தியாவில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக, வரும் 17-ம் தேதி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், அனைத்து மாநில கல்வித்துறை செயலாளரகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா சூழல் காரணமாக, காணொலியில் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


  • 11:26 (IST) 15 May 2021
    காற்றில் பறந்த கொரோனா பாதுகாப்பு விதிமுறைகள்; வீடியோ!

    தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சென்னை அயனாவரம் பகுதியில் பொதுமக்கள் சமூக இடைவெளி இன்றி, கூட்டம் கூட்டமாக கடைகளில் அத்தியாவசிய பொருள்கள் வாங்குவதற்காக குவிந்த காட்சி!


  • 11:18 (IST) 15 May 2021
    தங்கம் விலை உயர்வு!

    சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, கிராமுக்கு ரூ.13 உயர்ந்து ரூ.4,520க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.104 உயர்ந்து ரூ.36,160க்கு விற்பனை செய்யப்படுகிறது.


  • 11:14 (IST) 15 May 2021
    புதிய கல்விக் கொள்கை; மத்திய கல்வி அமைச்சர் ஆலோசனை!

    இந்தியாவில் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக, வரும் 17-ம் தேதி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், அனைத்து மாநில கல்வித்துறை செயலாளரகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். கொரோனா சூழல் காரணமாக, காணொலியில் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.


  • 11:10 (IST) 15 May 2021
    இந்தியாவில் கொரோனா நிலவரம்!

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3,26,098 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 3,890 பேர் தொற்றினால் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர்.


  • 11:07 (IST) 15 May 2021
    ஊரடங்கு விதிமுறை மீறல்; சென்னையின் 1700 வாகனங்கள் பறிமுதல்!

    தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தற்போது கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. சென்னையில் ஊரடங்கு விதிகளை மீறியதாக 2,079 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஊரடங்கு விதிகளை மீறிய 1,727 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


  • 11:04 (IST) 15 May 2021
    பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

    இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். கொரோனா தடுப்பூசி போடும் பணியை விரைவுபடுத்துவது பற்றியும் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


  • 10:34 (IST) 15 May 2021
    ரேஷன் கடைகளில் 2000 விநியோகம்!

    தமிழகத்தில் சுமார் 2 கோடி குடும்ப அட்டைதாரரகளுக்கு இன்று முதல் கொரோனா நிவாரண நிதியின் முதல் தவணையாக ரூ.2000 விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.


Corona Live Updates Tamilnadu Live News Udpate Tamilnadu Covid Lockdown
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment