Tamil Nadu daily coronavirus report: தமிழகத்தில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,869 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7,09,005 ஆக அதிகரித்துள்ளது.
உயிரிழப்பு விவரம்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று ஒரே நாளில் தனியார் மருத்துவமனைகளில் 14, அரசு மருத்துவமனைகளில் 17 என மொத்தம் 31 பேர் உயிரிழந்தனர். மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 10,924 ஆக அதிகரித்துள்ளது.

குணமடைந்தோர் விகிதம்: தமிழகத்தில் இன்று கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து 4,019 பேர் குணமடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6,67,475 பேர்ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா நோய்த் தொற்றில் இருந்து குணமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 30,606 ஆக குறைந்துள்ளது.
தேசிய அளவில் இந்த நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் விகிதம் இன்று 90 சதவீதத்தைத் தாண்டியுள்ளது. மேலும், தேசிய மட்டத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதித்தவர்களில் 6,68,154 பேர் மட்டுமே சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இது நாட்டின் மொத்த பாதிப்பில் 8.50 சதவீதமாகும்.
இந்தியாவில், புதிதாக குணமடைந்தவர்கள் 75 சதவீதத்தினர் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், டில்லி, அசாம், உத்தர பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்
மாவட்ட வாரியாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை:
சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 764 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

சென்னையை அடுத்து அதிகபட்சமாக கோவையில் – 271, செங்கல்பட்டு –155, திருவள்ளூர் – 161, சேலம் – 196, காஞ்சிபுரம் – 120, திருப்பூர் – 112, வேலூர் – 51, கடலூர் – 51, விழுப்புரம் – 49 , திருநெல்வேலி – 32 என்ற அளவில் கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று 764 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,95,672ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 9,639 ஆகும்.