Tamil Nadu Coronavirus Daily Bulletin: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 1,912 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை, தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,56,372 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில், டெல்லியில் புதிதாக 7,802 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, முதலிடத்தில் உள்ளது. கேரளாவில் புதிதாக 5,804 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் 4,132 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, மூன்றாவது இடத்தில் உள்ளது.
குணமடைவோர் விகிதம்: கொரோனா நோய்த் தொற்று பாதித்தவர்களில் இன்று மட்டும் 2,494 -பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், தமிழகத்தில் இதுவரை 7,27,752 -பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96.21 விழுக்காடாக உள்ளது .
தற்போது கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 17,154 ஆக உள்ளது.

தேசிய அளவில், தினசரி புதிய தொற்று பாதிப்பு எண்ணிக்கையை விட, சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், புதிதாக 44,684 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அதேபோல, 24 மணி நேரத்தில், 47,992 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியாவில், குணமடைதல் விகிதம் தொடர்ந்து அதிகரித்து இன்று 93%-ஐ தாண்டியது
உயிரிழப்பு நிலவரம் : கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் 12 பேர் உயிரிழந்தனர். தனியார் மருத்துவமனையில் 6 பேரும், அரசு மருத்துவமனையில் 6 பேரும் இதில் அடங்குவர். கொரோனா தொற்றால் மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,466 -ஆக அதிகரித்துள்ளது.

தேசிய அளவில், கடந்த 24 மணி நேரத்தில், 520 உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இதில், 79.23% பத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தது. மகாராஷ்டிராவில் 24.4% ஆக இருந்த உயிரிழப்பின் எண்ணிக்கை 127 ஆகும். தில்லி, மே.வங்கம் முறையே உயிரிழப்பு எண்ணிக்கை 91, 51 ஆக இருந்தது.

சென்னை நிலவரம்: சென்னையில் இன்று மட்டும் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அங்கு, இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,08,179 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் தற்போது கோவிட்-19 க்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 5,292.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் :
தமிழகத்தில், சமீபத்திய தகவலின் அடிப்படையில், சென்னை, செங்கல்பட்டு, கோயம்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களில் மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமாக உள்ளது. சில, நாட்களுக்கு முன்பு இந்த எண்ணிக்கை 7 ஆக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
பெரம்பலூர், ராமநாதபுரம், தென்காசி , தேனி , அரியலூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10க்கும் குறைவாக பதிவு செய்யப்பட்டன.