Tamil Nadu Coronavirus Daily Bulletin sep 06: தமிழகத்தில் இன்று 5,783 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை, தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4,57,697 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
குணமடைவோர் விகிதம்: கொரோனா நோய்த் தொற்று பாதித்தவர்களில் இன்று மட்டும் 5,820-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், தமிழகத்தில் இதுவரை 4,04,186-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 87.20 விழுக்காடாக உள்ளது .
தற்போது கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 51,458 ஆக உள்ளது.

உயிரிழப்பு நிலவரம் : இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றினால் 82 பேர் உயிரிழந்தனர். தனியார் மருத்துவமனையில் 30 பேரும், அரசு மருத்துவமனையில் 52 பெரும் இதில் அடங்குவர். கொரோனா தொற்றால் மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 7,836-ஆக அதிகரித்துள்ளது.

.
கொரோனா பரிசோதனை: தமிழகத்தில் இன்று மட்டும் 84,034 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்தது. கோவிட்-19 க்கான பரிசோதனை இதுவரை 51,26,231 பேருக்கு செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை நிலவரம்: சென்னையில் இன்று மட்டும் 955 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அங்கு, இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,41,654 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் :
திமுக தகவல் தொழில்நுட்ப அணி வெளியிட்ட சமீபத்திய தரவுகள்: தமிழகத்தின் 37 மாவட்டங்களின் கொரோனா நோய்த்தொற்று பரவல் ஆய்வறிக்கையை திமுக தகவல் தொழிநுட்ப அணி வெளியிட்டு வருகிறது. அதன், சமீபத்திய அறிக்கையை இங்கே கான்போம்.



இதற்கிடையே, தமிழகத்தில் நாளை முதல் மாநிலத்திற்கு உட்பட்ட இடங்களுக்கான சிறப்பு ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட உள்ளது. ஊரடங்கு காரணமாக, நாடு முழுவதும் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்ட நிலையில் சிறப்பு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் அனைத்து மாவட்டங்களிலும் கோவிட் தொற்று பாதிப்பு அதிகரித்து வந்ததால், சிறப்பு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், தமிழகத்தில் நாளை முதல் சென்னை- கோவை, சென்னை-மதுரை, சென்னை- திருச்சி, சென்னை- காரைக்குடி, சென்னை- கன்னியாகுமரி, கோவை- மயிலாடுதுறை, திருச்சி-நாகர்கோவில் உள்ளிட்ட வழித்தடங்களில் மொத்தம் 13 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil