டிக்டாக் பிரபலம் ஜி.பி.முத்துவுடன் இரு சக்கர வாகனத்தில்அதிவேக பயணம் செய்த யூடியூபர் டி.டி.எப் என்கின்ற வாசன் மீது கோவை காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்
இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கடந்த 14"ம் தேதி டிடிஎப் வாசன் அவரது இருசக்கர வாகனத்தில் யூடியூபர் ஜி.பி.முத்து என்பவரை பின் சீட்டில் அமர வைத்து கோவை மாநகரம் போத்தனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பாலக்காடு மெயின் ரோடு எம்.டி.எஸ். பேக்கரி அருகே அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும், மனித உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் விதமாக வாகனத்தை ஓட்டி அதை பதிவு செய்து அவரது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளார்.
Advertisment
Advertisements
இது சம்மந்தமாக போத்தனூர் காவல் நிலையத்தில் 279 ஐ.பி.சி, 184 எம்வி ஆக்டில் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மோட்டார் வாகன சட்டப்படி வாகனம் ஓட்டுபவரும் பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெல்மட் அணிய வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால் இந்த பயணத்தின்போது ஜி.பி.முத்து ஹெல்மட் அணியாதது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil