ரேஷன் கடைகளில் ரூ4000 பெற கடைசி தேதி இதுதான்… புதிய கார்டுகளுக்கு பொருட்கள் அறிவிப்பு!

Tamilnadu News Update : தமிழகத்தில் கொரோனா நிவாணை நிதி பெறாத அட்டைதாரர்கள் வரும் ஜூலை 31-ந்தேதிக்குள் பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tamilnadu Covid Relief Fund Update : தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மே மாதங்களில் கொரோனா தொற்றின் 2-வது அலை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியது. இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், திமுக ஆட்சிக்கு வந்தவுடன் கொரோனா நிவாரண நிதியாக ரூ 4 ஆயிரம் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் வாக்குறுதியில் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற திமுக ஊரடங்கு காலத்தில் 2 தவணைகளாக ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் ரூ 4 ஆயிரம் நிவாரணம் வழங்கப்பட்டது.

தமிழகம் முழவதும் உள்ள நியாவிலைக்கடை பணியாளர்கள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. இதன் மூலம் பல குடும்ப அட்டைதாரர்கள் நிவாரணத்தொகை பெற்றுக்கொண்ட நிலையில், கொரோனா  நிவாரண நிதியாக ரூ 4 ஆயிரம் ரூபாய் இதுவரை பெறாதவர்கள் வரும் 31ம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜூலை 31-க்குள் பெற இயலாத குடும்ப அட்டைதாரர்கள் ஆகஸ்ட் 1முதல் நியாயவிலை கடைகளில் கொரோனா நிவாரண நிதி மற்றும் நிவாரணபொருட்களை பெற்றுக்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளத.

தற்போதுவரை 99 சதவீதத்துக்கு மேலாக அட்டைதாரர்கள் நிவாரணத்தொகை மற்றும் 14 பொருட்கள் அடங்களிய நிவாரண மளிகை பொருட்களை பெற்றுக்கெண்டதாக  தமிழக அரசு, அறிவித்துள்ள நிலையில், புதிதாக  குடும்ப அட்டை பெற்றவர்கள் ஆகஸ்ட் முதல் வாரத்தில் இருந்து கொரோனா நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த மே 10 ஆம் தேதி முதல் விண்ணப்பித்த மூன்று லட்சம் பேருக்கு குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டு வருவதாக்கும் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu covdi relief fund update july 31 last date

Next Story
மதவாதத்தை தூண்டும் பேஸ்புக் பதிவு : தமிழகத்தில் 6 மாவட்டங்களில் என்.ஐ.ஏ தேடுதல் வேட்டை
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express