Tamilnadu covid -19 case Tamil News: இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை உருவாகிவரும் நிலையில், தமிழகத்தில் தொற்று பாதித்தோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் தற்போதைய மொத்த பாதிப்பு 9746 உள்ளது. இதில் நேற்று புதிதாக தொற்று பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1636 ஆகவும், சென்னையில் புதிதாக தொற்று பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 633 ஆக பதிவாகியுள்ளது.
நேற்று தமிழக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "மாநிலத்தில் இருந்து 1,90,11,118 மாதிரிகள் இன்றுவரை பரிசோதிக்கப்பட்டுள்ளன. அதில் 80,634 மாதிரிகள் நேற்று அனுப்பப்பட்டுள்ளன. மாநிலத்தில் 259 கொரோனா சோதனை செய்யும் வசதிகள் உள்ளன, அவற்றில் 69 அரசு மற்றும் 190 தனியார் வசதிகள் ஆகும்" என்று தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் புதிதாக 40 மாணவர்ளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இங்கு பயிலும் 12 மாணவர்ளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 52 ஆக அதிகரிப்பு. இந்த 52 மாணவர்களும் ஒரே வகுப்பை சேர்ந்தவர்கள். மேலும் கல்லூரி விடுதியில் தொற்று பாதிக்கப்பட்ட ஆறு மாணவர்கள் மற்ற மாணவர்களுக்கும் தொற்றையை பரப்பியதாக அந்த கல்லூரியின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளர்.
"கடந்த ஞாயிற்றுக்கிழமை, முதலில் 6 மாணவர்களுக்கு தொற்று செய்யப்பட்டது. அதன் பிறகு, அனைத்து மாணவர்களும் சோதனை செய்யப்பட்டனர். செவ்வாய்க்கிழமை வரை, 52 மாணவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும் மருத்துவம் பயிலும் முதல் ஆண்டு மாணவர்கள். மாணவிகள் சிலருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வகுப்புகளில் ஒன்றாக கலந்துகொண்டதால் இது மற்ற மாணவர்களுக்கும் பரவியிருக்கக்கூடும். இருவரின் விடுதிகளும் பூட்டப்பட்டு விட்டது.
மேலும் தொற்று பாதிக்கப்பட்ட 12 மாணவர்கள் பெற்றோருடன் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள் என அவர்களின் பெற்றோர்கள் உறுதியளித்துள்ளனர். மற்ற 40 மாணவர்கள் மருத்துவமனையில் உள்ள கோவிட் பராமரிப்பு மையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர்" என்று அந்த கல்லூரியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் தமிழக அரசு, அனைத்து மருத்துவக் கல்லூரி மற்றும் விடுதிகளை மூடவும், மாணவர்களுக்கு ஆன்லைனில் வகுப்புகளை நடத்தவும் கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil