Tamil Nadu Coronavirus Daily Bulletin: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 2,334 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை, தொற்றால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 7,43,822 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 நோய் தொற்றால், 50 ஆயிரத்திற்கும் குறைவானோருக்கு கொரோனா (45,674) தொற்று கண்டறியப்பட்டது.
குணமடைவோர் விகிதம்: கொரோனா நோய்த் தொற்று பாதித்தவர்களில் இன்று மட்டும் 2,386-பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் மூலம், தமிழகத்தில் இதுவரை 7,13,584 -பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 95.93 விழுக்காடாக உள்ளது .
இந்தியாவில், தொடர்ந்து 37-வது நாளாக புதிதாக சிகிச்சை பெறுபவர்களை விடவும் குணமடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 49,082 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
உயிரிழப்பு நிலவரம் : கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றினால் 20 பேர் உயிரிழந்தனர். தனியார் மருத்துவமனையில் 9 பேரும், அரசு மருத்துவமனையில் 11 பேரும் இதில் அடங்குவர். உயிரிழந்த அனைவருக்கும், ரத்த அழுத்தம், இருதயக் கோளாறு போன்ற இணை நோய்கள் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றால் மாநிலத்தின் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 11,344-ஆக அதிகரித்துள்ளது. தேசிய அளவில், கடந்த 24 மணி நேரத்தில் 559பேர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் நிகழ்ந்த மொத்த கொரோனா உயிரிழப்பில், 26.8 சதவீத பங்கு மகாராஷ்டிரா மாநிலம் பதிவு செய்ததுள்ளது. டெல்லி தலைநகரில் 79 பேர் உயிரிழந்தனர்.
சென்னை நிலவரம்: சென்னையில் இன்று மட்டும் 601 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அங்கு, இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,04,862 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு நிலவரம் :
7 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நூற்றுக்கும் அதிகமாக உள்ளது. பெரம்பலூர் , ராமநாதபுரம், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒற்றை இலக்கில் உள்ளன.