ரெம்டேசிவிர் “மாய மருந்து” அல்ல, 30% கொரோனா நோயாளிகளுக்கு மட்டுமே இந்த மருந்து தேவைப்படுகிறது என்று தமிழக சுகாதார செயலாளர் ஜே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் வைரஸ் தொற்று பரவலை தடுக்க அரசு மற்றும் சுகாதாரத்துறை சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க ஆக்ஸிஜன் ஆதரவுடன் அமைக்கப்பட்டுள்ள கூடுதல் படுக்கைகள் வசதியை ஆய்வு செய்த தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், கொரோனா தொற்றுக்கு பயன்படுத்தப்படும், ரெம்டேசிவிர் மருந்து தினமும் சுமார் 3,000 பேருக்கு சில்லறை விற்பனையை அனுமதிக்க மாநில அரசு செய்துள்ளளது. இந்த மருந்தை”வாங்குவதற்கு வருபவர்களின் எண்ணிக்கை ஒரு நாளைக்கு 3,000 க்கும் குறைவாக இருந்தாலும், தேவையில்லாமல் அதிக கூட்டம் கூடுகிறது. “தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ரெம்டேசிவிர் மருந்து வாரத்திற்கு 59,000 குப்பிகளை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு நாளைக்கு 3,000 பேர் வாங்கினால் 6 நாட்களுக்கு 18,000 குப்பிகள் மட்டுமே விற்பனை செய்யப்படும். இதை நாங்கள் நிர்வகிக்க முடியும். மக்கள் பீதி அடையத் தேவையில்லை,” என்றும் கூறியுள்ளார்.
மேலும் எய்ம்ஸ் மருத்துவர்கள் மற்றும் நமது மூத்த மருத்துவர்கள் உட்பட மருத்துவ வல்லுநர்கள் பலரும், டோசிலிசுமாப் (tocilizumab), அசித்ரோமைசின் (azithromycin) மற்றும் துத்தநாக மாத்திரைகள் (zinc tablets) போன்ற பல்வேறு மருந்துகள் பெரிய அளவில் கிடைக்கின்றன, அவைகளை மருத்துவர்களின் நெறிமுறைகளின்படி எடுத்துக்ககொள்ளலாம். ரெம்ட்சிவிர் ஒரு மாய மருந்து அல்ல, ஒவ்வொரு கொரோனா நோயாளிக்கு இது தேவைப்படுகிறது, “என்று அவர் கூறினார்.
மேலும் ரெம்ட்சிவிர் பரிந்துரைப்பதில் தமிழ்நாட்டின் மூத்த மருத்துவர்கள் வகுத்துள்ள நெறிமுறைக்கு எதிராகச் செயல்படும் தனியார் மருத்துவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்கக்கூடும் என்று எச்சரித்துள்ள ராதாகிருஷ்ணன், “தயவுசெய்து ரெம்ட்சிவிர் மருந்து குறித்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும், உண்மையில் தேவைப்படுபவர்களுக்கு இந்த மருந்து கிடைக்கும் என்றும் உறுதியளித்துள்ள அவர், கிட்டத்தட்ட 30% நோயாளிகள் மருந்தை எடுத்துக் கொண்டு கடந்த காலங்களில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியதாக அவர் கூறினார்.
முகமூடி அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, போன்ற கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் தங்கள் ஆதரவை அளிக்க வேண்டும் என்று கூறிய அவர், அடுத்த 10 நாட்கள் கொரோனா வைரஸ் பரவலின் முக்கய நாளாக இருக்கும் என்றும், மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்த்து வீட்டுக்குள் தங்கியிருந்து அரசுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும் நாம் கொரோனா வைரஸுக்கு எதிரான போரில் இருக்கிறோம், முகமூடிகளை அணிவது, தேவையற்ற பயணத்தைத் தவிர்ப்பது போன்ற இந்த விதிமுறைகளை பின்பற்றினால், தான் கொரோனா தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil