6 அடி இடைவெளி… கடைக்குள் அதிகபட்சம் 5 பேர்..! டாஸ்மாக் பிறப்பித்த 15 கட்டளை

தமிழகத்தில் மதுபானக்கடைகள் மற்றும் மதுப்பிரியர்கள் பின்பற்ற வேண்டிய புதிய வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், நாளைமுதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வரவுள்ளது. இதனைமுன்னிட்டு மதுபானக்கடைகள் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை கடந்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு உச்சத்தை தொட்டு வருகிறது. இதில் கடந்த சில நாட்களாக 8 ஆயிரத்தை தொட்ட கொரோனா தொற்று, நேற்று புதிய உச்சமாக 10 ஆயிரத்தை கடந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை (ஏப்ரல் 20) முதல் தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த ஊராடங்கு இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 4 மணிக்கு முடிவடைகிறது. இந்த சமயத்தில் பேருந்து போக்குவரத்தும் தடை செய்யப்பட உள்ளது. மேலும் சென்னையில் இருந்து வெளியூருக்கும், வெளியூரில் இருந்து சென்னைக்கும் வரும் பேருந்துகள் இரவு 9 மணிக்குள் வந்து செல்லும் வகையில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதில் வார விடுமுறை நாளான ஞாயிற்றுகழமைகளில் முழு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. இந்த நாளில் பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த புதிய கட்டுப்பாடுகள் நாளை முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கான புதிய கட்டுப்பாடுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி,

மதுபானக்கடைகளில் இரண்டு வடிக்கையாளர்களுக்கு இடையே 6 மீட்டர் இடைவெளி பின்பற்ற வேண்டும். கூட்ட நெரிசல் இருக்க கூடாது.

ஒரே நேரத்தில் கடையின் உள்ளே 5 நபர்களுக்கு மேல் இருக்க கூடாது.

அனைத்து மதுபான மற்றும் சில்லரை விற்பனை கடைகளிலும், மேற்பார்வையாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்வதை உறுதி செய்ய வேண்டும்.

கடைப்பணியாளர்கள் மூன்றடுக்கு முகமூடி, முககவசம்,  கையுறைகள் மற்றும் மேற்குறிப்பிடப்பட்ட இடைவெளியில் கிருமிநாசினி திரவத்தை பயன்படுத்த வேண்டும்.

கடையை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். கடைப்பணியாளர்கள் வேலை நேரத்தில் கிருமிநாசினி திரவத்தை 5 தடைவைகள் குறிப்பிட்ட காலை இடைவெளியில் பயனபடுத்த வேண்டும்.

கடைப்பணியாளர்கள் மதுப்பிரியர்கள் கடைக்கு அருகில் மது அருந்த அனுமதிக்காமலும், கடையில் அதிகம் கூட்டம் சேராமலும், பொது இடங்களில் மது அருந்துவதை தடை செய்தும் பணிபுரிதல் வேண்டும்.

மதுப்பிரியர்கள் சமூக இடைவெளியுடன் முககவசம் அணிந்து வர செய்து விற்பனை மேற்கொள்ள வேண்டும்.

21 வயது நிறம்பப்பெறாதவர்களுக்கு கண்டிப்பாக மதுபானம் விற்பனை செய்தல் கூடாது. எக்காரணம் கொண்டும் மதுபானங்கள் மொத்த விற்பனை செய்தல் கூடாது.

என அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu covid 19 new guidelines for tasmac shops guidelines

Next Story
EVM மெஷின் கால்குலேட்டர் மாதிரி; வெளியே இருந்து கட்டுப்படுத்த முடியாது: சத்யபிரதா சாகு
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com