Senior Leader Pazha Nedumaran Health Report : தமிழத்தில் ஜெட் வேகத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்று பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்துள்ள நிலையில், ஒரு சில பகுதிகளில் கொரோனா தொற்று குறைவான அளவில் உறுதி செய்யப்பட்டு வருகிறது. இதில் தொடக்கத்தில் இருந்தே, அரசியல் பிரமுகர்கள், சினிமா பிரபலங்கள் என அனைவரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகி வந்தனர். இதில் பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயரிழந்தது, தமிழகத்தில் சோகத்தை ஏற்பட்டுத்தியது. சமீபத்தில் நடிகர் சூர்யா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது அவர் குணமடைந்துள்ளதாக அவரது சகோதரர் கார்த்தி ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவரும், உலக தமிழர் பேரமைப்பு நிறுவன தலைவருமான பழ.நெடுமாறன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவருக்கு, கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனையின் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனையடுத்து சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், தற்போது தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்கு சிகிச்சை அளிக்கும் மூத்த மருத்துவர் ஒருவர் அவரது கொரோனா தொற்று கூறுகையில், தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது. கொரோனா தொற்று அவரது நிரையீரலை 20% பாதித்துள்ளது. ஆனால் தற்போது அவர் நன்றாக இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். இந்நிலையில், பழ.நெருமாறன் விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்துவதாக திமுக தலைவர் ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் பழ.நெருமாறன் அவர்களுக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி கேட்டு வருத்தப்பட்டதாக தெரிவித்துள்ள ஸ்டாலின், மூத்த தமிழ் ஆர்வலர் ஈழ தமிழர்களின் உரிமைகளுக்காக நீண்ட காலமாக போராடி வருபவர் என்று தெரிவித்துள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற
t.me/ietamil"