தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், இன்று புதிய உச்சமாக ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு உச்சம் தொட்டு வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் முழு மற்றும் பகுதி நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்று அதிகரிக்கும் மாநிலங்களில் ஒன்றான தமிகத்தில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் ஒச்சத்தை தொட்டு வருகிறது. இதில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை கடந்த சில நாட்களாக 20 ஆயிரத்தை கடந்து வந்த நிலையில், இன்று புதிய உச்சமான 26 ஆயிரத்தை கடந்துள்ளது.
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 26,465 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,23,265 பேராக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் கொரோனா தொற்றுக்கு 197 பேர் பலியான நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 15,171 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து இன்று 22,381 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 11,73,439 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய கொரோனா தொற்று பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில், 6738 பேருக்கும், செங்கல்பட்டில் 2154 பேருக்கும், கோயம்புத்தூரில் 2101 பேருக்கும், திருவள்ளூரில் 1384 பேருக்கும், மதுரையிவல் 1051 பேருக்கும், தூத்துக்குடியில் 855 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் சில புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil