முன் களப்பணி: சென்னையில் இதுவரை 258 போலீசாருக்கு கொரோனா தொற்று

258 police personnel got affected COVID-19 in Chennai Tamil News: கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 258 காவலர்களில் சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சிலர் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu covid-19 update Tamil News: 258 police personnel got affected COVID-19 in Chennai

 Tamilnadu covid-19 update Tamil News:  தமிழகத்தின் முக்கிய நகரங்களில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. தொற்று பரவல் துவங்கியதில் இருந்து முன் களப்பணியாளர்களான தமிழக காவல் துறையில் இதுவரை 3,609 காவலர்கள் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 3,338 காவலர்கள் தொற்றில் இருந்து குணமாகியுள்ளனர். 

கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2ம் அலையின் போது, தொற்றில் இருந்து மீண்ட 6 காவலர்களும், மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த 7 காவலர்களும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்றின் முதல் அலையில் உயிரை இழந்த காவலர்களின் குடும்பங்கள் அரசாங்கத்திடம் இழப்பீடு பெற்றுள்ளதாகவும், இரண்டாவது அலையில் உயிர் இழந்த காவலர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், கடந்த சனிக்கிழமை தொற்று காரணமாக உயிரிழந்த தலைமை காவல்துறை அதிகாரி மகாராஜனின் உருவப்படத்திற்கு நகர போலீஸ் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் மற்றும் பிற அதிகாரிகள் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தினர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu covid 19 update tamil news 258 police personnel got affected covid 19 in chennai

Next Story
சென்னையை அச்சுறுத்தும் கொரோனா; கட்டுக்குள் கொண்டு வருமா மாநகராட்சி?Chennai covid19 updates : centers are filling up very fast
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express