இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், இதே நிலை தமிழகத்திலும் தொடர ஆரம்பித்துள்ளது. இதில் இன்று ஒரே நாளில் 198 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடங்கியது. இதனால் மக்கள் பெரும் சிரமத்தை சந்தித்த நிலையில், மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு அறிவித்து கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த ஊரங்கு காரணத்தில் பொது நிகழ்ச்சிகள் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சிக்கும் அனுமதி வழங்கப்பட வில்லை. ஆனாலும் கொரோனா முதல் அலை 2-வது அலை என தொடர்ந்து பரவி வந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று பாதிப்பு பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டது. அதன்பிறகு சில மாதங்கள் கட்டுக்குள் இருந்த கொரோனா தொற்று தற்போது மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. ஏற்கனவே 2 அலைகள் பரவிய நிலையில், தற்போது 3-வது அலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 198 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 63 பேர், செங்கல்பட்டு 25 பேர், கோயம்புத்தூர் 18 என அதிகபட்சமாக பாதிப்பு உறுதி செய்யப்பட்டடுள்ளது. மற்ற மாவட்டங்களில் ஒற்றைப்படையில் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று 105 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 1086 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“