தமிழகத்தில் குறைந்து வரும் தொற்று பாதிப்பு; உயரும் இரட்டிப்பு காலம்

கடந்த வாரத்தில், தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொள்வோரில் 20 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது, சென்னை உள்பட 14 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு விகிதம் குறைந்து வருகிறது.

கட்டுக்குள் கொண்டு வர, தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. மே 31-ம் தேதியோடு முழு ஊரடங்கு நிறைவடைய உள்ள நிலையில், தளர்வுகளற்ற முழு ஊரடங்கால் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால், அடுத்த ஒரு வார காலத்திற்கு ஊரடங்கை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் படி, தமிழகத்தில் வரும் 7-ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருக்கும்.

இந்நிலையில், ஊரடங்கு அமலில் இருந்த கடந்த மே 11-ம் தேதி முதல் தற்போது வரை தமிழகத்தில் ஏறத்தாழ் 6 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், 7,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலின் இரட்டிப்பு விகிதம் மற்றும் வைரஸ் பெருக்கம் ஆகியவை குறைந்து வருவதாக தொற்று நோயியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னையில், கடந்த மே 11-ம் தேதி 7,466 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், நேற்று 2,705 பேருக்கு மட்டுமே தொற்று பாதிப்பு ஏற்பட்டு தொற்று வீதம் குறைந்துள்ளது. கோவையை பொறுத்த வரையில், கடந்த 11-ம் தேதி 2,650 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், நேற்று 3,692 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு பரவல் விகிதம் அதிகரித்துள்ளதை காட்டுகிறது. திருப்பூரில் கடந்த 11-ம் தேதி 582 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமை நிலவரப்படி 1,823 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரத்தில் தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்து கொள்வோரில் 20 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. தற்போது, சென்னை உள்பட 14 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு விகிதம் குறைந்து வருகிறது. கடந்த மே 11-ம் தேதி தொற்று பாதிப்பின் இரட்டிப்பு விகிதம், 33 நாள்களாக இருந்த நிலையில், தற்போது 39 நாள்களாக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பு தொடர்ச்சியாக குறைந்து வருவதாலும், தேவைக்கு ஏற்ப அதிகரிக்கப்பட்டதாலும் மருத்துவமனைகளில் படுக்கை வசதிகள் நோயாளிகளுக்கு எளிதாக கிடைக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள தொற்று நோயியல் நிபுணர்கள், தளர்வுகளற்ற முழு ஊரடங்குக்கு முன்னதாக 36,000 என்றிருந்த தொற்று பாதிப்பு தற்போது 31,000 என்ற அளவுக்கு குறைந்து வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், உலக அளவில் தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர, ஊரடங்கு ஒன்றே தீர்வாக அமையும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu covid lockdown chennai covai tirupur doubling rate benefits of lockdown

Next Story
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தை ஆளுநர் ரத்து செய்ய வேண்டும் – மு.க ஸ்டாலின்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com