Tamilnadu Covid Lockdown Update : தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து தமிழகத்தில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கிய நிலையில், ஊரடங்கு உத்தரவிலும் தள்வுகள் அறிவிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் இம்மாத தொடக்கத்தில் அறிவிக்கப்பட்ட இந்த ஊரடங்கு உத்தரவு 3 முறை நீடிக்கப்பட்டு வரும் 28-ந் தேதி காலை 6 வரை அமல்படுத்தப்பட்டது.
இதில் தொற்று பாதிப்பு அதிகம் உள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு. இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து 50% பயணிகளுடன் அனுமதிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஊரடங்கு வரும் 28-ந் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீடிக்கப்படுமா என்பது குறித்து கேள்வி எழுந்தது.
இதனையடுத்து ஊரடங்கு உத்தரவு நீடிப்பு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்கள் மற்றும் முக்கிய அமைச்சர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் முடிவில் தமிழகத்தில் மேலும் சில தளவுகளுடன் ஊரடங்கு உத்தரவு வரும் ஜூலை 5 ந் தேதி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகம் உள்ள, கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில், டீக்கடைகள் காலை 6மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் பார்சல் சேவைக்குமட்டுமே அனுமதி
தொடர்ந்து மன்சாதன கடைகள், புத்தக விற்பனை கடைகள், வாகனம் பழுது பார்க்கும் நியலையங்கள், செல்போன் சார்ந்த கடைகள், கம்யூட்டர் தொடர்பான கடைகள் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது. சாலையோர உணவுக்கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பார்சல் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
பதிவாளர் அலுவலகங்கள் 100% பணியாளர்களுடனும், தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடனும் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கிகள், காப்பீடு நிறுவனங்கள் என் அனைத்து அலுவலகங்களுக்கும் 50% பணியாளர்களுடனும் இயங்க அனுமதி. அனைத்து வகையான கட்டுமானப்பணிகளுக்கும் அனுமதி அளிக்கப்பட்டள்ளது.
அழகுநிலையங்கள், சலூன்கள் குளிர்சாதன வசதி இல்லாமல் 50% வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதி. உள்ளாச்சிதுறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்கள் காலை 6 மணி முதல் காலை 9 மணிவரை நடைபயிற்சிக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.
திரைப்படம் மற்றும் சின்னத்திரை படப்பிடிப்பு பணிகள் 100 பணியாளர்களுடன் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது. வட்டாச்சியரின் அனுமதி பெற்று வாரம் ஒருமுறை திரையறங்கை பராமரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளர்.
இதில் கொரோனா தொற்று மிதமாக உள்ள 23 மாவட்டங்களில் முன்பு அறிவிக்கப்பட்ட தளர்வுகள் அப்படியே தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூடுதல் தளர்வாக மாவட்டத்திற்குள் மற்றும் மாவட்டங்களுக்கு இடையே 50% பயணிகளுடன் பேருந்து போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் குளிர்சாதன பேருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையேர கடைகள் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்கள் தவிர்த்து மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் இ-பாஸ் இல்லாமல் பயணிக்காலம் என்றும், அனைத்து கடற்கரைகளும் காலை 6 மணி முதல் காலை 9 மணி வரை நடைப்பயிற்சிக்காக மட்டும் அனுமதிக்கப்படம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.