தமிழகத்தில் புதிய தளர்வுகள்: பள்ளிகள் முழுமையாக திறப்பு; தியேட்டர்களில் 100% இருக்கைகள் அனுமதி

Tamilnadu News Update : தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு வரும் நவம்பர் 15-ந் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu Covid Lockdown Update : தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மே மாதங்களில் கொரோனா தொற்றின் 2-வது அலை தீவிர பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்ததை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு இல்லாமல் உள்ளது.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவில் மேலும் தளர்வுகள் அறிவிப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன மூதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார். இன்னும் 2 வாரங்களில் தீபாவளி பண்டிகை வருவதையெட்டி பொது இடங்களில் மக்கள் கூட்டம் கூடுவதை தவிர்ப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தின் முடிவில் தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்குஉத்தரவு நவம்பர் 15-ந் தேதி வரை நீடிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில், கரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், 31.10.2021 காலை 6.00 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. கொரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில், நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் 15.11.2021 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.

பண்டிகைக் காலங்களில், பொதுமக்களின் வேண்டுகோளுக்கு இணங்கவும், அத்தியாவசியத் தேவைகளுக்காகவும் மட்டுமே பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதனைக் கருத்தில் கொண்டு, பொதுமக்கள் அனைவரும் எதிர்வரும் பண்டிகை நாட்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்குமாறும், பொது இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிவதோடு, சமூக இடைவெளியினை கண்டிப்பாகக் கடைப்பிடிக்குமாறும், கேட்டுக்கொள்ளப்படுகிறது.

நவம்பர் 1-ந் தேதி முதல் நடைமுறைக்கு வரும் தளவுகள் :

1-ம் வகுப்பு முதல் –ம் வகுப்பு வரை சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்படும்.

திரையரங்குகளில் 100 சதவீத பார்வையாளர்களுடன் நிலையாள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது.

ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள் உரிய கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து அனுமதிக்கப்படும்.

கடைகளில் பணிபுரிபவர்களும். வாடிக்கையாளர்களும் முககவசம அணிவதை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

கூட்ட அரங்குகளில் அனைத்து வகையான கலாச்சார நிகழ்வுகள் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

அனைத்து வகையான படப்பிடிப்புகளும் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதிக்கப்படுகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu covid lockdown extended november 15th update

Next Story
தமிழக விவசாயிகள் போராட்டம்… பயன்களும் கடக்க வேண்டிய தூரமும்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com