Advertisment

தடுப்பூசி திட்டம் செயல்படுத்த முடியாது : சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

Covid 19 Vaccine : 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாளை செயல்படுத்த முடியாது என சென்னை மாநகராட்சி ஆணையர் கூறியுள்ளார்.

author-image
WebDesk
New Update
தடுப்பூசி திட்டம் செயல்படுத்த முடியாது : சென்னை மாநகராட்சி ஆணையர் தகவல்

தேவையான அளவு தடுப்பூசி வரவில்லை என்பதால், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை நாளை செயல்படுத்த முடியாது என்று சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார்.

Advertisment

இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 3 லட்சத்தை கடந்துள்ளது. மேலும் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், மத்திய மாநில அரசுகள் கொரோனா தொற்று பாதிப்பை கட்டுக்குள் கொண்டு வர போராடி வருகிறது. இதனால் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், பொதுமக்கள் அனைவரும் முக்கவசம், சமூக இடைவெளி ஆகியவற்றை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்புக்கு இந்தியாவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் முதல் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதில முதல்கட்டமாக கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்களுக்கும், இரண்டாவது கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து வரும் மே 1-ந் தேதி (நாளை) முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி செலுத்தும் பணிக்காக தீவிரமா தயாராகி வரும் நிலையில், நாட்டில் பல பகுதிகளில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தடுப்பூசி மையங்களுக்கு வரும் பொதுமக்கள் திரும்பி சென்று கொண்டிருக்கும் நிலையில், தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களிடம் இருந்து மாநில அரசு நேரடியாக தடுப்பூசிகளை பறிமுதல் செய்துகொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் நாளை செயல்படுத்த முடியாது என்றும், தேவையான தடுப்பூசிகள் இன்னும் வரவல்லை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.  மேலும் கர்நாடக மாநிலத்திலும், இத்திட்டத்தை நாளை செயல்படுத்த முடியாது என்று அறிவித்துள்ள நிலையில், தடுப்பூசி மையங்களில் நாளை வரிசையில் நிற்காதீர்கள் தடுப்பூசி கையிருப்பில் இல்லை என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Covid 19 In India
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment