ஞாயிற்றுகிழமைகளிலும் கொரோனா நிவாரண நிதி டோக்கன் வழங்கப்படும் – தமிழக அரசு அறிவிப்பு

Corona Relief fund Token : தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் ஞாயிற்றுகிழமைகளில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் ஞாயிற்று்கிழமைகளிலும் வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், தினசரி பாதிப்பு எண்ணிக்கை 26 ஆயிரத்தை கடந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் (மே 10) வரும் மே 24-தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் அதியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் காலை 6 மணி முதல் பகல் 12 மணிவரை மட்டுமே திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் மக்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ 2000 வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுகிழமைகளிலும், மக்களுக்கு கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கப்படும் என்று தமிழக அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், ரேஷன் கடைகளில் வரும் ஞாயிற்றுக்கிழமையும், காலை 8 மணி முதல் பகல் 12 மணி வரை கொரோனா நிவாரண நிதிக்கான டோக்கன் வழங்கப்படும் என்றும், இந்த நாட்களில் பணியில் ஈடுபடும் ரேஷன் கடை ஊழியர்களுக்கான விடுமுறை நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu covid update corona relief fund token will be given sunday

Next Story
16வது சட்டப்பேரவை சபாநாயகரான அப்பாவு யார்? பின்னணி என்ன?appavu dmk mla, appavu elected as speaker, legislative speaker appavu, திமுக எம் எல் ஏ அப்ப்பாவு சபாநாயகர், சபாநாயகர் அப்பாவு, திமுக, ராதாபுரம் தொகுதி எம் எல் ஏ அப்பாவு, முக ஸ்டாலின், radhapuram mla appavu, appavu dmk mla elected as speaker, tamail nadu, dmk, mk stalin
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express