கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதி: இந்த ட்விட்டர் தளத்தில் முறையிடலாம்

Covid Update Tamilnadu : கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் படுக்கை வசதி, தடுப்பு மருந்து, ஆக்ஸிஜன் போன்ற பற்றாக்குறைகள் குறித்து உதவிகள் பெற புதிய ட்விட்டர் பக்கம் தொடங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் திவிரமடைந்து வரும் நிலையில். தினசரி பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்து வருகிறது. இதில் ஒரு புறம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடாந்து நடைபெற்று வந்தாலும் பாதிப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து உச்சம் பெற்று வருகிறது. இதனை தடுக்க மத்திய மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வரும் நிலையில், சென்னை உட்பட தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா நோயாளிகள் மருத்துவம்மனையில் குவிந்து வருகின்றனர்.

இந்த நிலையில், மருத்துவமனையில் படுக்கைகள், தடுப்பு மருந்துகள் மற்றும் ஆக்ஸிஜன் ஆகிய அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த தேவைகளை ஈடுசெய்ய தமிழக அரசு கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் மருத்துவமனைகளில் படுக்கை மற்றும் இதர வசதிகள் பற்றிய புகார்கள் மற்றும் உதவிகளுக்கு ட்விட்டர் பக்கத்தில் கோரலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக சுகாதார மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

உலக சுகாதார அமைப்பின் (WHO) அறிவித்துள்ளபடி கொரோனா வைரஸ் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், 1939 இன் கீழ் ஒரு தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நோயை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இந்தியா முழுவதும் உள்ள பல மாநிலங்களைப் போலவே, கொரோனா தொற்று தனது 2-வது அலை பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.  இந்த ​​தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளிலும் அரசு தீவிரமாக ஈடுபட்டுள்ளது. 

இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, தமிழக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை மற்றும் அனைத்து வரி துறைகள் இயக்குநரகங்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த தலைமை மையத்தை (யு.சி.சி) உருவாக்கியுள்ளது. கொரோனா நோயாளிகளின் தேவைகளை தீர்ப்பது குறித்து நடவடிக்கைகளை இந்த மையம் மேற்கொள்ளும் என்றும்,  மோசமான நோயாளிகளுக்கு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் சிலிண்டர் தேவைகளுக்கு  தற்போதுள்ள 104 சுகாதார உதவி எண்ணடன் ஒருங்கிணைந்து செயல்படும்.  சி.எம்.சி.எச்.ஐ.எஸ் போன்ற தற்போதைய சி.வி.ஐ.டி தொடர்பான சேவைகளுடன் யு.சி.சி தொடர்பில் இருக்கும்.

மேலும் படுக்கைகள் காலியிட நிலையைப் அறிந்துகொள்வதற்கும், ஆன்ஸிஜன் ஐ.சி.யூ வசதிகளுடன் பொருத்தமான கோவிட் படுக்கைகள் தேவைப்படும் பொதுமக்களுக்கு ஆதரவளிப்பதற்கும் யு.சி.சி தமிழ்நாட்டின் படுக்கை நிர்வாக போர்ட்டலை உருவாக்கியுள்ளது. இது தனியார் மற்றும் அரசு மருத்துவமனை என இரண்டையும்  யு.சி.சி கண்காணிக்கும்.  சென்னை கார்ப்பரேஷனில்  தனியார் சுகாதார மருத்துவமனைகள், மற்றும் அரசு சுகாதார மருத்துவமனைகளில், கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதிகள் அதிகரிப்பதிலும், ஆக்ஸிஜன் கிடைப்பதை உறுதி செய்வதிலும் யு.சி.சி தொடர்ந்து செயல்படும்.  தனியார் மருத்துவமனைகள்.  படுக்கைகள் தேவைப்படுபவர்களுக்கு ஆதரவாக ஒரு புதிய ட்விட்டர் கணக்கு (@ 104GOTN) தொடங்கப்படும். 

இந்த ட்விட்டர் கணக்கின் ஒரே நோக்கம் ‘தனிநபர்கள் நேரடியாக படுக்கைகளைக் கோரவும் உதவியைப் பெறவும் உதவி செய்யும். மேலும் இந்த ட்விட்டர் கணக்கில் நோயாளிகளின்  அனைத்து கோரிக்கைகளும் கையாளப்படும். கோரிக்கைகள் அதிகமாகுமபோது,  அதனை எளிதில் கண்டுகொள்ள, #BedsForTN என்ற ஹேஷ்டேக் அறிமுகப்படுத்தப்படும்.  இதில் மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைப்பது தொடர்பான தகவல்களை பெறலாம். இந்த வசதி தமிழக மக்களுக்கு பெரிதும் பயன்படும் என்று தமிழக அரசு உறுதியாக நம்புகிறது என்று கூறப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Tamilnadu covid update health and family welfare start twittr page and hashtag

Next Story
நீதிபதிகள் வாய்மொழியாகக் கூறியதை ஊடகங்கள் வெளியிடக் கூடாதா? தேர்தல் ஆணைய கோரிக்கை நிராகரிப்புCovid-19 cases surge, chennai high court rejects election commission request, சென்னை உயர் நீதிமன்றம், தேர்தல் ஆணையம், கொரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை அதிகரிப்பு, high court rejects election commission request, EC sought to restrain media from reporting oral observations, chennai high court
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com