Tamilnadu Covid Update : தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு மீண்டும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள நிலையில். தமிழகத்தில் இன்று மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் கடந்த 2019-ம் ஆண்டு இறுதியில் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு கடந்த 2 வருடங்களாக உலகையே தன் கட்டுக்குள் வைத்துள்ளது என்று சொல்லலாம். அந்தஅளவிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுததியுள்ள இந்த வைரஸ டெல்டா, கருப்புபூஞ்சை தற்போது ஒமைக்ரான் என பல வகைகளில் மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது. இதில் அதிக தொற்று பாதிப்பு கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்திய 2-வது இடத்தில் உள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்றின் வீரியம் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், கடந்த சில வாரங்களாக தொற்றின் வேகம் அதிகரித்து பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. மேலும் கொரோனா தொற்றின் வேகம் வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் கணித்துள்ள நிலையில், கொரோனா தொற்றின் உருமாறிய வகையான ஒமைக்ரான் தொற்றும் தனது வேகத்தை அதிகரித்துள்ளது. இதனால் இந்தியாவில் கொரோனா தொற்றின் 3-வது அலை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தொற்று பாதிப்பு காரணமாக பல மாநிலங்களில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்திலும் நேற்று முன்தினம் முதல இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுகிழமைகளில் முழுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. ஆனாலும் தமிழக்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்த வண்ணம் உள்ளது.
அந்த வகையில் நேற்று சுமார் 8 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மேலும் அதிகரித்து 10978 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 27,87,391 ஆக உயர்ந்துள்ளது. இதில் இன்று ஒரே நாளில் 1525 பேர் தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ள நிலையில், மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 27,10,288 ஆக உயர்ந்துள்ளது, மேலும் இன்று 68 பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து தமிழகத்தில் ஒமைக்ரான் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 185 ஆக உயர்ந்துள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் இன்று 5098 பேருக்கும், செங்கல்பட்டில் 1332 பேருக்கு, உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது 40260 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், தொற்று பாதிப்புக்கு இன்று 10 பேர் மரணமடைந்ததை தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்புக்கு பலியானோர் எண்ணிக்கை 36843 ஆக உயர்ந்துள்ளது. இதில் கடந்த சில நாட்களாக அரசியல் பிரமுகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் தொற்று பாதிப்புக்கு ஆளாகி வருவது தொடர்ந்து வருகிறது.
அந்த வகையில், நடிகர்கள் சத்யராஜா, அருண்விஜய், மகேஷ்பாபு, நடிகை த்ரிஷா, மீனா உள்ளிட்ட பலருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சங்கரய்யாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜூவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து நாளை மறுநாள் (திங்கள் கிழமை) ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று கூறியுள்ள அமைச்சர் மா.சுப்பிரமணியன் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை கடுமையாக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil