தமிழகத்தில் அதிகரித்து வந்த கொரோனா தொற்றின’ 2-வது அலை தற்போது வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுளள நிலையில், தொற்று பாதிப்புக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடர்ந்து தீவிரமான நடைறெ்று வருகிறது. இதில் ஏற்கனவெ தமிழகம் முழுவதும் 5 முறை மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுள்ள நிலையில், சனிக்கிழமை தமிழகம் முழுவதும் 6-வது தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.
இதற்கான 1,600 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், 2.5 லட்சம் கோவிட் -19 தடுப்பூசி மருந்துகளை செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாராந்திர மெகா தடுப்பூசி முகாம்களை நடத்துவதில் கொரோனா தொற்று பாதிப்புக்கு எதிராக அரசின் கடுமையான முயற்சிகள் காரணமாக, அதிகமான மக்கள் பயனடைந்ததாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியான ஒரு அறிக்கையில், செப்டம்பர் 12 அன்று நடத்தப்பட்ட முதல் தடுப்பூசி முகாமில், 1,91,350 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. தொடர்ந்து செப்டம்பர் 19 அன்று நடத்தப்பட்ட இரண்டாவது முகாமில், 2,02,931 தடுப்பூசி டோஸ்களும், செப்டம்பர் 26 அன்று நடத்தப்பட்ட மூன்றாவது முகாமில், 2,25,627 தடுப்பூசி டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து அக்டோபர் 3 மற்றும் அக்டோபர் 10 அன்று நடத்தப்பட்ட நான்காவது மற்றும் ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாமில் மொத்தம் 1,58,144 மற்றும் 1,71,833 தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளில், அக்டோபர் 20 வரை, அரசு மற்றும் மாநகராட்சி தடுப்பூசி மையங்கள் மூலம் 36,14,747 முதல் டோசும், 20,71,455 இரண்டாவது டோசும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதேபோல், தனியார் மருத்துவமனைகள் மூலம் 11,27,448, முதல் தடுப்பூசி மற்றும் 3,05,920 இரண்டாவது தடுப்பூசி அளவுகள் செலுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக, மாநகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் அக்டோபர் 20 வரை 71,19,870 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அக்டோபர் 23 ந்தேதி (நாளை) நடைபெறவுள்ள 6-வது சிறப்பு முகாமில், 600 மருத்துவர்கள் மற்றும் 600 செவிலியர்கள் உட்பட மொத்தம் 16,000 சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். மாநகராட்சியில் 3,24,760 உட்பட சுமார் 4,61,400 தடுப்பூசி அளவுகள் உள்ளன. தடுப்பூசி போடப்படாத மக்கள் அனைவரும் சிறப்பு முகாமைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil